பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 நெஞ்சுக்கு நீதி அந்த விழாவிலே நான் பேசும்போது ஒன்றைக் குறிப் பிட்டேன். "ஜனவரி 3-ஆம் தேதி கட்டபொம்மன் பிறந்த நாள். நான் ஜூன் 3ஆம் தேதி பிறந்தேன். இரண்டு பேருமே மூன்றாம் தேதி பிறந்தவர்கள். அதனால் தான் கட்டபொம்மனுக்கு எட்டப்பன் இருந்ததுபோல் - எனக்கும் எனக்கும் சில எட்டப்பர்கள் இருக்கிறார்கள் என்று கருதுகிறேன். எனவே அந்த மூன்றாம் தேதி ஒரு சோதனையான தேதி என்று புரிகிறது" இப்படி நான் அந்த விழாவில் கூறியது எந்த அளவுக்கு உண்மையாகி விட்டது. பின் எனது உரையை அந்த விழாவில் பின்வருமாறு நிறைவு செய்தேன் :- - "பதவிகள் பெரிதல்ல; ஆற்றுகின்ற பணி; மான உணர்ச்சி யோடு போராடுகின்ற வீரம் அவைதான் என்றைக்கும் போற்றப் படக் கூடியவைகளாகும். அந்த வீரத்தை நெஞ்சில் ஏற்றிய தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபடும் ஒரே இயக்கமாக தி.மு.கழகம் இப்படிப்பட்ட பெரியவர்களின் துணையோடு அரசுக் கட்டிலில் இருக்கிறது. அண்ணன் இல்லை என்றாலும் ரத்தத்தோடு ரத்தமாக தசையோடு தசையாக எங்கள் கண்ணின் கருமணியாக இதயத்தின் துடிப்பாக இருக்கிறார். எங்கள் மூச்சோடு மூச்சாக இருக்கிறார். அந்த அண்ணனை இதயத்தில் நினைத்து, அவரே இருந்து செய்ய முடியாத காரியங்களை அவருக்காகச் செய்கிறோம். அண்ணனே! கடற் கரையில் நீடு துயில் கொண்டிருக்கின்ற அண்ணனே! இதோ இந்தக் கட்டபொம்மன் கோட்டை உனக்குக் காணிக்கை! காவிரிப் பூம்புகார் கலைக் கூடம் உனக்குக் காணிக்கை! நாளை உருவாக இருக்கும் வள்ளுவர் கோட்டம் உனக்குக் காணிக்கை! இப்படிப்பட்ட காணிக்கைகளை தொடர்ந்து தந்து கொண்டே இருப்போம்! offe