பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 433 இந்தத் தீர்மானங்களும், தேர்தல் பிரகடனங்களும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் பிறகு மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்டுவிட்ட உண்மைகளாக ஆகிவிட்டன. அந்த உண்மையை தி.மு. கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் பலமுறை வெளிக் கொணர்ந்து, அதற்கேற்ற வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று வாதிட்டிருக்கிறது. 1967-ஆம் ஆண்டு தி.மு. கழகத் தேர்தல் அறிக்கை பின் வருமாறு அமைந்தது:- "ஒருமைப்பாடு என்பதை வலியுறுத்தி நடைமுறைக்குக் கொண்டு வரும்போது, அது, ஒரு பகுதியினர் பிற்பகுதியினர் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஆகிவிடாமல் பாதுகாத்திடும் பொறுப்பை தி.மு. கழகம் மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது. மாநில உரிமைகள் நசுக்கப்படாமல் பாதுகாத்திடவும், பொருளாதார வளம் ஒரேசீராக எல்லா மாநிலங்களுக்கும் அமை வதற்கான திட்டம் மேற்கொள்ளப்படவும் தி.மு.கழகம் பொறு] புடன் பணியாற்ற உறுதி கொண்டிருக்கிறது. மாநில உரிமைகளைப் பாதுகாத்திடும் முறையிலும், குறிப் பிடப்படாத எஞ்சிய அதிகாரங்கள் மத்திய சர்க்காரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முறையை மாற்றி, அவை மாநிலங் களுக்குத் தரப்பட வேண்டும் என்பதற்காகவும் கழகம் பாடு படுவதுடன், அந்த நோக்கத்துடன் இந்திய அரசியல் சட்டத்த திருத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறது." 1969-ஆம் ஆண்டு "ஹோம் ரூல்" ஆங்கில ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கடைசி கட்டுரையில்- "அன்புள்ள தம்பி, நான் பதவியைத் தேடிபைத்தியம் பிடித்து அலைபவனு மல்ல; காகிதத்தில் கூட்டாட்சியாகவும், நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்புக் கொண்டதாகவும் இருக்கிற D ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி கொண்டிருப்பவனுமல்ல. இதற்காக மத்திய அரசுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதும், டில்லியோடு சண்டை