பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 439 டெல்லியிலே அவர்கள் இன்றைக்கு அரசோச்சுகின்ற காரணத் தினால் எதையும் விட்டுத் தர முடியாது என்கிற அந்த மனப்பான்மையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிகளோடு இணைத்து அரசியல் சட்டம் திருத்தப்பட தேவையில்லை. மத்திய மாநில உறவுகளுக்காக என்ற ஒரு திருத்தத்தை அவர்கள் சார்பாக இரண்டு காங்கிரஸ் கட்சி களுடன் இணைந்து வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், பார்வேர்டு பிளாக் கட்சியும், தமிழ் அரசுக் கழகமும், சுயேட்சை உறுப்பினர்களுக்கும் மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறவேண்டிய இன்றியமையாமையும் மாநில சுயாட்சியினுடைய அவசியத்தையும் இங்கே வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். மாநிலத்திற்கு சுயாட்சி தேவையில்லை; அதை அண்ணா எந்தக் காலத்திலும் சொல்லவில்லை; மாநிலங்களுக்குக் கூடுத லான அதிகாரங்கள் தேவை; அதிக அதிகாரங்கள் தேவை; ஆனால் அந்த அதிகாரங்களை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்குக் கொடுக்க கூடாது என்ற கருத்தை அ.தி.மு.க. நண்பர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். தி.மு. கழக ஆட்சியில் தரப்பட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டனவா? என்னென்ன நல்ல காரியங்களை செய்வதற்கு இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சட்டம் இடம் தரவில்லை? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுருக்கமாக பதில் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை. இந்தியாவிலேயே தோன்ற இருக்கின்ற ஜன நாயகப் புரட்சியினிடையே தோற்றுவாயாக இந்த தீர்மானம் நிறைவேற்றப் படுகிற நாளாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலே தான் இந்தத் தீர்மானத்தை முன் வைத்திருக்கிறோம். அதிகாரங்கள் கூடுதலாக மாநிலங்களுக்கு வேண்டு மென்று கேட்பதால் மத்திய சர்க்காருக்கு குறைவான அதிகாரங் கள் இருக்க வேண்டுமென்ற பொருள் அல்ல. மத்திய சர்க்காருக்கு அதனுடைய வலிவு, காக்கப்படுவதற்கான அதிகாரங்கள் அங்கே அங்கே இருக்க வேண்டுமென்பதும் மாநில சர்க்கார்களுக்கு அந்த மாநிலங்களின் வளம் பெருக்கப்படுவ