பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 நெஞ்சுக்கு நீதி உரத் தொழிற்சாலைகளின் இருப்புகளைச் சோதனையிடுகிற அதிகாரம் நமக்குத் தேவை என்றும் பலமுறை கேட்டிருக்கிறோம், பயன் இல்லை. சிறு தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத் திற்குச் செல்லக்கூடாது என்று தடை இருந்தது. அந்தத் தடையை மத்திய சர்க்கார் நீக்கி விட்டார்கள். யாரைக் கேட்டுக் கொண்டு நீக்கினார்கள்? நம் மாநிலத்தை கலந்துக் கொண்டு செய்யப் பட்டதா? இல்லை. எண்ணெய் விலையை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தலாம் என்று தான் வேர்க்கடலைக்கு லெவி வேண்டுமென்றும், வியாபாரத்திற்கு லைசென்ஸ் தரப்பட வேண்டுமென்றும் அதற் கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்றும் அனுமதி கேட்டோம். 12 - 4 - 1973 - இல் இருந்து கேட்டோம். இதுவரை 1973-இல் அந்த அனுமதி தரப்படவில்லை. மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே இதுவரை எண்ணெய் டெப்போக்களுக்கு மண்ணெண்ணையை விநியோகம் செய்ய உத்திரவிடுகிற அதிகாரம் இதுவரையில் மாநிலத்திற்கு இருந்தது. ஆனால் திடீரென்று 1972 - இல் இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொண்டார்கள். கரை போடப்பட்ட வேட்டி, வண்ணச் சேலைகள் ஆகிய வற்றை நெய்வது கைத்தறிகளுக்கே ஒதுக்கப்பட வேண்டு மென்றும் கைத்தறியாளர்களுக்கு தங்கு தடையின்றி நூல் கிடைக்க 1962 - ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3 - ஆம் நாள் டாக்டர் யு. கிருஷ்ணாராவ் அவர்கள் தொழிலமைச்சராக இருந்த போதே பேரவையிலே ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். கிட்டதட்ட இருபதாண்டு காலம் ஓடிவிட்டது! அந்தத் தீர்மானத்தின் கதி என்ன? கவனிக்கப்படவில்லை. எனவே அதிக அதிகாரம் கேட்பது இங்கே அமர்ந் திருக்கிற அமைச்சர் பெருமக்கள் அந்த அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா? அதிகாரம் எங்களுக் காக அல்ல. மாநிலத்திற்காக கேட்கிறோம். அது புரிய வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி என்று சொல்கிறோம். மத்தியில் கூட்டாட்சி - மாநில சுயாட்சி என்று கூறுகிற நேரத்திலேயே அங்கு பிரிவனைக்கு எள்ளளவும் இடமில்லை