பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 443 ☐ என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ‘நீங்கள் ஏற்கனவே திராவிட நாடு கேட்டவர்கள், பிரிவினை கேட்ட வர்கள். ஆகவே உங்களுடைய வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உங்களைச் சந்தேகிக்கிறோம். என்று இங்கே சொன்னார்கள். கண்டான் - போர், போர் என்று என்று அலைந்த அசோகன் களம் பல கண்டான். கலிங்கம் வரை சென்றான் - கலிங்கத்தில் களம் அவனுடைய கரியின் கால்பட்டு ஆயிரக்கணக் கானவர் பிணமாயினர்; பிணக்குவியலை கண்டான். நான் இனிமேல் போர் புரிய மாட்டேன், புத்தன் வழி செல்வேன் என்றவுடனே, அவனைப் பார்த்து உன்னுடைய பழைய வரலாறு போர் வரலாறு ஆகவே ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று கூறி இருந்தால் அன்றைய இந்தியக் கொடியிலே அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்க முடியாது. இன்றைக்கும் அசோகச் சின்னம் நம்முடைய இந்தியாவினுடைய தேசீய சின்னமாக ஆகி இருக்க முடியாது. வழிப்பறி கொள்ளை அடித்த ரட்சன் வால்மீகியாகி இராமாயணம் எழுதினான். அவனையே ஒத்துக் கொண்டீர்கள் எங்களை ஒத்துக் கொள்ள கூடாதா?" இப்படியெல்லாம் என்னுடைய . பேச்சைத் தொடர்ந்த அவர்கள் என்று நான் அடுத்து அ. தி. மு. க. நண்பர்கள் அண்ணா மாநில சுயாட்சி என்ற வார்த்தையைச் சொன்னாரா கேட்டதற்கு பதிலாக முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் 21 - 7 - 1968 -இல் நடைப்பெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் பேசிய நீண்ட பேச்சினை முழுவதும் படித்துக் காட்டி: "மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல!" என்று அண்ணா அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதையும் எடுத்துக் காட்டினேன். தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளுங் கட்சியான தி.மு. கழகம், இந்திய யூனியன் முஸ்லீம்லீக், பார்வாடு பிளாக், தமிழ்நாடுகம்யூனிஸ்டு கட்சி,தமிழரசு கழகம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் 161 பேர் ஆதரித்து வாக்களித்தனர். தீர்மானத்தை எதிர்த்து பழைய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்த்த 23 பேர் வாக்களித்தனர். ஐந்து நாட்கள் நடைபெற்ற விவாதம் போதாதென்பது போல மேலும் விளக்கம் கேட்டு, விளக்கம் கேட்க அவகாசம்