பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 நெஞ்சுக்கு நீதி ☐ நான் அலகாபாத் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வருமாறு: "தமிழ்நாட்டிலிருந்து உத்திரப் பிரதேசத்துக்கு வந்துள்ள என்னை இங்குள்ள சிலர் ஆச்சரியத்தோடு பார்க்கக்கூடும். சிலர் என்னைத் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கக் கூடும். நான் இராமனுக்கு விரோதி என்றுகூட யாரோ சுவரொட்டி ஒட்டியுள்ளார்களாம். இராமனுக்கு விரோதி இராவணனே தவிர, நானல்ல! இதைக்கூடப் புரிந்து கொள்ளாத சிலர் இங்கிருப்பது வியப்புக்குரியதேயாகும். உத்திரப் பிரதேசத்தில் நான் வந்துள்ள இந்த நேரத்தில் இங்கு ஒரு மக்கள் அரசு இல்லாதது வருந்தத்தக்கது. ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிற போது இங்கு நான் வந்திருக்கிறேன். இங்கு மட்டுமல்ல ஆந்திராவில் - ஒரிசாவில் - மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட சுமார் பதினைந்து கோடி மக்கள் இந்தியாவில் ஜனநாயகத்தை அனுபவிக்காமல் ஜனாதிபதி ஆட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியபோது அம்பேத்கார் தெளிவாகச் சொன்னார். ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தப்படுகிற விதி செத்துப்போன எழுத்துக்களாக இருக்கும் என்று சொன்னார் ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் 32 தடவை ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 25 - வது ஆண்டு வெள்ளி விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஜனாதிபத் ஆட்சியைப் பொறுத்தவரையில் இன்னும் 18 தடவைகள் ஜனாதிபதி ஆட்சி வந்தால் நாம் 50 - வது ஜனாதிபதி ஆட்சிக்கு ஒரு பொன்விழா கொண்டாடலாம். கவர்னர் பதவி தேவையில்லை என்பது தி.மு.க.வின் எண்ணமாகும். ஆனால் ஆங்காங்கு அடிக்கடி ஜனாதிபதி ஆட்சி நடத்துவதற்காக அந்தப் பதவியை மத்திய அரசினர் வைத்திருக் கிறார்கள் போலும். இந்தியாவில் இதுவரைக்கும் ஜனாதிபதி ஆட்சி வராத மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கிறது. அது தமிழ் நாட்டிற்கும் என்று சிலருக்குக் கவலையாக இருக்கிறது. அவர்கள் யார்? அவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள். நான் காங்கிரஸ் என்று கூறும்போது என்று கூறும்போது ஆளும் காங்கிரசைச் வரவில்லையே