பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 நெஞ்சுக்கு நீதி பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்று கூறும் போது முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை, மேலவை முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், மாநகராட்சி முன்னாள் - இந்நாள் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த மசோதாவை அறிமுகம் செய்தபிறகு அதுபற்றி ஆய்வு செய்வதற்காக பொதுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை மசோதா என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு கருத்து தெரிவித்தபோதும், அப்போது சென்னைக்கு வந்திருந்த ஜனசங்கத் தலைவர் எல். கே. அத்வானி அவர்கள் அந்த மசோதா பற்றி கருத்து கூறும்போது, "தமிழ்நாடு அரசின் ஊழல் ஒழிப்பு மசோதா பற்றிய கொள்கையை வரவேற்கிறேன். ஊழல் பிரச்சினை மாநில மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு இதனை ரேற்கொள்ளக் கூடாது. இந்த மசோதா வரம்பிற்குள் முதலமைச்சரும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய சர்க்காரின் லோக்பால், லோக் அயுக்த் மசோதா வரம்புக்குள் பிரதமர் சேர்க்கப்படவில்லை" என்று கூறினார். எம்.ஜி.ஆர். அப்போது கறுப்பு தேதியிட்ட 'இந்து அவர் மாத்திரமல்ல; 21 - 2 - 73 நாளேட்டில் எம். ஏ.சதானந்த் என்பவர் அந்தச் சட்டம் பற்றித் தன்னுடைய கருத்தை எழுதியிருந்தார். அதில் "எல்லாவற்றுக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு இந்த வகையிலும் அகில இந்தியா விற்கும் வழிகாட்டியுள்ளது. நடைமுறைக்கேற்ற நல்ல சட்டங்களைக் கொணர்வதில் தமிழகம் எப்பொழுதுமே முன்னோடி யாக இருந்திருக்கிறது. அந்த வகையில் இந்த மசோதாவும் ஒரு முன்னோடியாகும். ஒரு ஜனநாயக அமைப்பில், அறிவுபூர்வமான கருத்துக்கள் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அவை வரவேற்கப்படவேண்டியவை. அந்த வகையில், மிகச் சிந்தனைத் தெளிவோடு இந்த மசோதா வந்துள்ளது. நடைமுறைக்கேற்ற நியாயமான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யக் காரணமாக இருந்தவர்களைப் பாராட்டுகிறேன்," என்று எழுதியிருந்தார். சுயராஜ்யா வார இதழில் அதன் ஆசிரியர் க.சந்தானம் அவர்கள் இந்தச் சட்டம் குறித்து அப்போது ஒரு கட்டுரையே தீட்டியிருந்தார். அது வருமாறு: