பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஜெ. பி. பாராட்டு! மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி வந்த தமிழகம்-நமது மாநிலத்திற்கு அதனால் ஏற்பட்ட இழப்பை ஓரளவுக்காவது சரிக்கட்ட மத்திய அரசு முன்வராததாலும், அதற்காக எத்தனையோ முறை மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தும் அது பயனளிக்காத காரணத்தாலும் மதுவிலக்குக் கொள்கையை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்தாததால் ஏற்பட்ட இன்னல்களுக்கு தமிழகம் ஆளாக வேண்டியிருந்ததாலும், நிதி நிலைமையைச் சமாளிப்பதற்காக மிகுந்த மனவேதனையுடன்- கொழுந்துவிட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள்ளே கொளுத்தப் படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளைக்கு இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி, 1971-ஆம் ஆண்டு மதுவிலக்கை ஒத்திவைப்பதாக நான் அறிவித்திருந்த போதிலும்-அண்ணல். காந்தி நெறி நின்று அண்ணா வழியில் ஆட்சி நடத்திய எனக்கு மதுவிலக்கை ஒத்தி வைத்ததின் காரணமாக நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு உறுத்திக்கொண்டே இருந்தது. ஒத்திவைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தான் அதனை ஒத்தி வைத்தபோதே பேரவையில் நான் ஒத்திவைப்பதாக உறுதியாக அறிவித் திருந்தேன். அவ்வாறு நான் சட்டப் பேரவையில் அறிவித்தி ருந்ததற்கு இணங்க, 14-8-74 அன்று சட்டப் பேரவையில் முதல் துணைமதிப்பீடுகளை அவையிலே வைத்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் அன்று அதே ஆண்டிலேயே மீண்டும் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தேன். அப்படி அன்று நான் அறிவித்த போதே மற்றொரு அறிவிப்பையும் அவையிலே அறிவித்தேன். அந்த அறிவிப்பு வருமாறு: "நீண்ட நெடு நாட்களாக நல்லோர் பலரின் முறை யீடாக இருந்து வருவதும், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகளில்