பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 455 நீதி0 "ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள ஐந்தாண்டு காலம் வரை காத்திருந்து, அந்த அரசு தவறு செய்யுமானால் அதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மக்களால் வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டு கீழே இறக்கப்பட வேண்டுமேயல்லாமல் இடையில் வன்முறைக் கிளர்ச்சிகளால் ஒரு அரசை இறக்குவது என்பது முறையாக ஆகிவிடக் கூடாது, அது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல; அதே நேரத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெரியவர்கள் இப்படிப் பட்ட கிளர்ச்சிகளில் ஈடுபடுவார்களானால் அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய அரிய யோசனைகளைக் கேட்டு அவர் களுடைய மனதைப் புண்படுத்தாமல் பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்" என்று சொன்னேன். ஜெயப்பிரகாஷ் நாராயண் அமெரிக்க நாட்டிலே கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகத்திலே பயின்றவர் என்றாலும் சோஷலிச சித்தாந்தங்ளோடுதான் இந்தியாவிற்குத் திரும்பினார். அங்கே பயின்ற அந்தக் காலத்திலே காப்பித் தோட்டங்களில் வேலை செய்து தன்னுடைய அன்றாடச் செலவிற்குச் சம்பாதித்துக் கொண்டவர். இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். சதித்திட்ட வழக்கில் ஹசாரிபாக் சிறையில் பூட்டப் பட்டார். அங்கிருந்து தப்பினார். வெள்ளைக்கார அரசாங்கம் ஜெயப்பிரகாஷ் நாராயணின் தலையைக் கொண்டு வருபவர் களுக்கு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஒன்பதாண்டு காலம் சிறைச்சாலையிலே வாழ்ந்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல தடவைகள் அமைச்சர் பதவியையும், பிரதமர் பதவியையும் ஏற்க வேண்டு மென்று வலியுறுத்தியும் மறுத்துவிட்டவர் அவர்! குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் உட்பட பலர் கேட்டபோதும் மறுத்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அப்படிப்பட்டவரை தமிழகத்திற்கு ராஜாஜி அவர் களின் நினைவாலயத்தைத் திறப்பதற்காக நான் அழைத்ததும் வருவதற்கு ஒப்புக்கொண்டார். ராஜாஜி அவர்கள் எந்த அளவிற்கு தமிழகத்துடன்-இந்தியாவுடன் தொடர்பு கொண்டு பணியாற்றியவர் என்பதையும் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவருக்காக கழக அரசின் சார்பில் ஏற்படுத்தப் பட்ட நினைவாலயத்தினைத் திறப்பதற்காக வந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களுக்கு தமிழகத்திலே காங்கிரஸ்காரர்கள்