பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 நெஞ்சுக்கு நீதி கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்தனர். எம்.ஜி.ஆர். ஜெ.பி. அவர்களுக்கு கடிதம் எழுதி தமிழ்நாட்டிற்கு வந்து ஊழலை ஒழிக்கப் போராட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கறுப்புக்கொடி காட்டுவது பற்றி நான் கருத்து தெரிவிக்கும் போது "ஜெயப்பிரகாஷ் நாராயண் இந்தியா முழுவதும் ஊழல் ஒழிய வேண்டுமென்கிறார். இங்கே அவர் ஏதேனும் சுட்டிக்காட்டுவாரானால் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறது கழகம்! ஊழல் அல்லது தவறு என்று சுட்டிக் காட்டப் படுமானால் தம்பியானாலும், அண்ணன் ஆனாலும், ஆருயிர்த் தோழன் ஆனாலும், கழகம் நிர்வகித்த சென்னைக் கார்ப்பரேஷன் "ஆனாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்காதது கழக அரசு. நாளை வரும் ஜெயப்பிரகாசர் சுட்டிக் காட்டினாலும் நடவடிக்கை எடுப்போம். அந்த அடிப்படையில்தான் அவரோடு நம் உறவிருக்கும். தி. மு. கழகம் ஜெயப்பிரகாசருக்கு அமோக வரவேற்பளிக்கும்" என்று குறிப்பிட்டேன். நான் கழகம் வரவேற்பு தரும் என்று கோவையிலே குறிப்பிட்டது மறுநாள் ஏடுகளில் வெளிவந்தது. அதன் விளைவை 1975-ஆம் ஆண்டு மே திங்கள் 5-ஆம் நாள் காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கண்டது. பார்த்த இடமெல் லாம் தி.மு. கழகக் கொடிகள்தான். கறுப்புக்கொடி காட்டப் போவதாக அறிவித்தவர்கள் எல்லாம் சென்ற இடம் தெரிய வில்லை. மக்களின் ஆர்வப் பெருக்கின் அலைமோதலில் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களை எப்படி புகைவண்டியிலி ருந்து இறக்கி காருக்குக்கொண்டு போவது என்று தெரியாத நிலை. அவரை வரவேற்பதற்காகச் சென்றிருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். அந்த அளவிற்கு தி.மு. கழகம் ஒரு மகத்தான வரவேற்பை சென்னையில் ஜெ.பி. அவர்களுக்கு அன்று கொடுத்தது. அன்று பிற்பகல் ஜெ. பி. அவர்கள் என்னுடைய இல்லத் திற்கு வருகை தந்தார். பேராசிரியர் அவர்களும், நாவலர் அவர் களும் உடன் இருந்தனர். அன்று மாலையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவாக சென்னை கிண்டியில் காந்தி நினைவு மன்டபத்திற்கு அருகே தமிழக அரசால் அமைக்கப்பட்ட ராஜாஜி நினைவாலயத் திறப்பு விழா. நடைபெற்றது. தலைமைச் செயலாளர்