பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி ☐ 457 பி. சபாநாயகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு முறையில் நான் தலைமையேற்றேன். முதலமைச்சர் என்ற நாவலர் அவர்கள் ராஜாஜி அவர்களின் உருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார். பின்னர் ராஜாஜி நினைவாலயத்தை ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார். அங்கே ஜெயப்பிரகாசர் விடுத்தார். அன்று உரையாற்றும் போதுதான் அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் "குதிரைப் பந்தயம் ஒரு சூதாட்டம். அதனை அண்மையில் இங்கு ஒழித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதனால் இங்குள்ள பெரும் புள்ளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு, குதிரைப் பந்தயம், லாட்டரி ஆகிய இந்த மூன்றும் கிடையாது! அதைப்போல மதுவையும், குதிரைப் பந்தயத்தையும் ஒழித்த நீங்களும் இந்த லாட்டரி யையும் வெகு விரைவில்........." என்று கூறியபோதே நான் குறுக்கிட்டு, ஜெ.பி. அவர்களிடம் அண்ணா பிறந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் அந்த ஆண்டே 'லாட்டரி சீட்டு' தமிழகத்தில் இருக்காது என்று பலத்த கையொலிகளுக்கிடையே கூறினேன். தொடர்ந்து பேசிய ஜெ.பி. அவர்கள் "தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் இப்போது என்னிடம் செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து லாட்டரி சீட்டை ஒழித்து விடுவதாகத் தெரிவித்தார். அவர் உடனுக்குடன் துணிகரமாக நீண்ட கால பயனளிக்கக்கூடிய முடிவுகளை எடுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை நான் முன்பே அறிவேன். அதைத் தொடர்ந்து இப்போதும் இங்கேயே அறிவித்ததற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அதற்காக நன்றியைத தெரிவித்துக் கொள்கிறேன். ராஜாஜி அவர்களுக்கு இன்று எழுப்பிய நினைவாலயத்தைவிட மிகப் பெரிய சிறப்பு மகத்தான நினைவா லயம் என்னவென்றால் தமிழகத்தில் பரிசுச் சீட்டை ஒழித்தல், மதுக்கடை ஒழிப்பு, குதிரைப் பந்தய ஒழிப்பு ஆகியவைகள் தான்" என்றார். ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அந்த விழாவில் பேசிய ஏனைய கருத்துக்கள் வருமாறு: "ராஜாஜி அவர்களின் பெயரால் அமைந்துள்ள மண்டபத்தினை திறந்துவைக்கும் பெருமையை எனக்களித் ததற்காக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத்