பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 நெஞ்சுக்கு நீதி ☐ தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த தவப் புதல்வரின் நினைவால் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் வடிவ அமைப்பினை உங்கள் முதைைமச்சர் அவர்களே தயாரித்தார் என்பதைக் கேட்டு நான் பெரும் மகிழ்ச்சியும் பேருவுவகையும் கொள்கிறேன். ராஜாஜிக்காக இந்த நினைவு மன்டபத்தினை தமிழக அரசு எழுப்பியதற்காக நான் முதற்கண் பாராட்டுகிறேன். பார்த நாட்டுப் பிரதமர் அவர்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூறலாம் என்றால் தமிழகத்தின் முதலமைச்சர் காட்டிய முன் உதாரணத்தைப் பின்பற்றி பாரதப் பிரதமர் அவர்கள் நம் முடைய நாட்டின் தலைநகரான டெல்லியில் ராஜாஜி அவர் களுக்கு ஒரு நினைவாலயத்தை எழுப்ப வேண்டும் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். ராஜாஜி அவர்கள் தொடர்ந்து காங்கிரசிலே இருந்திருந்தால், இதற்குள் ராஜாஜி அவர்களுக்கு' ஒன்றல்ல, எண்ணற்ற பல நினைவாலயங்கள் எழுப்பப்பட்டி ருக்கும் என்று நான் துணிந்து கூற விரும்புகிறேன். று அதிகாரத்தால், சம்பிரதாயத்தால் நிலைநாட்டப்பட்ட அமைப்பிற்கு எதிராக மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதை வரவேற்பதாக அண்மையில் பிரதமர் அவர்கள் கூறியிருப்பதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ராஜாஜி அவர்களுக்கு நினைவாலயம் எழுப்புவதின் மூலம் அவருடைய பெருமைக்கு மேலும் சிறப்பு தேடித்தர முடியாது. ஆனாம் வருங்கால தலைமுறை தங்களுடைய நாட்டின் முன்னோர்கள் சிறப்பைப் பற்றி நினைத்து அவர்கள் காட்டிய வழிகள் பற்றி அறிந்து கொள்ள நினைவு மண்டபங்கள் உதவியாக இருக்கும். திருமதி இந்திரா காந்தி கூறியதைப்போல மாறுபட்ட கருத்து என்று எடுத்துக்கொண்டால், மனச்சான்றுக்கு உண்மையான மாறுபட்ட கருத்துக்கு உறுதுணையாக இருக்கிற உத்தம நெறியை விளக்க எடுத்துக்காட்டாக விளங்கியவர் ராஜாஜி அவர்களாகும். அந்த முறையில் பாரதப் பிரதமர் அவர்கள் மனச்சான்றுக்கு உண்மையான மாறுபட்ட கருத்தை வரவேற்பது உண்மையாக இருந்தால், ராஜாஜி அவர்களுக்கு இதுவரையில் நினைவாலயம் எழுப்பாத தவறை திருத்திக் கொண்டு உடனடி யாக அவருக்கு நினைவாலயம் எழுப்ப முன் வருவார் என்று நம்புகிறேன். அந்த விழாவிறகு தலைமை தாங்கிய நான் உரை யாற்றும்போது, "ராஜாஜி அவர்களின் தூய நினைவாக இந்த நினைவுச் சின்னம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இந்த