பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

☐ நெஞ்சுக்கு நீதி 459 நினைவாலயத்தைத் திறந்து வைப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி படைத்த ஒருவர் இன்று வருகை தந்திருப்பது விழாவிற்கு பெருமை சேர்ப்பதாகும். எத்தனையோ தியாகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்; தன்னலமற்றவர்; நாட்டிற்கு உழைத்தவர்; இன்னும் உழைத்துக் கொண்டி ருப்பவர் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் ஆவார்கள். நேர்மையும் நியாயமும் நிலைக்க பாடுபட்டு வருகிற ஒரு தலைவர், அபிப்பிராய பேதங்களுக்கு இடையிலேயும்- அன்பால், அறிவால், ஆற்றலால், எங்கள் இதயம் கவர்ந்த ராஜாஜி அவர்களின் நினைவாலயத்தைத் திறந்து வைப்பது என்பது ராஜாஜியின் குடும்பத்தாரை மட்டுமல்ல; தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்ல குடும்பத்தாரையும் மகிழச்சியிலும் உணர்ச்சியிலும் திளைக்கச் செய்கின்ற நிகழ்ச்சியாகும். தமிழகத்தில் இன்று நடைபெறுகின்ற அரசுக்கு 1967-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தவர் ராஜாஜி. அதன்பிறகு கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டபோதும், நான் அவரைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் ஆரம்பத்தில் நீங்கள் வழங்கிய வாழ்த்து கல்மேல் எழுத்துப்போல அப்படியே இருக்கிறது; அதனை, நீங்களே நினைத்தால்கூட உங்களால் மாற்றி எழுதிட இயலாது என்று கூறுவேன். அவரும் முகம் மலர புன்னகை புரிந்து என்னை மீண்டும் மீண்டும் வாழ்த்தி அனுப்புவார். 1971-ஆம் ஆண்டு நிதிநிலை காரணமாகவும், பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாகவும் மெத்த மனவருத்தத்தோடு தமிழக அரசு மதுவிலக்கை ஒத்தி வைத்தது. தமிழக அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று அவர் கருத்து வெளியிட்டார். என்னிடமும் வலியுறுத்தினார். மது விலக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டு மென்று அவர் கூறிய உருக்கமிகு சொற்கள் என் உள்ளத்திலே ஊடுருவிப் பாய்ந்து குடைந்து கொண்டிருந்த காரணத்தினால் மீண்டும் தமிழக அரசின் சார்பில் முழுமையான மதுவிலக்குத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். இது ராஜாஜி அவர்களுக்கு நாங்கள் செலுத்திய காணிக்கையாகும். இங்கு எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவாலயத்தைவிட, மீண்டும் மதுவிலக்குக் கொள்கையை