பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 465 தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திராவைப் பதவியி லிருந்து நீக்க வேண்டுமென்று கேட்டு குடியரசுத் தலைவரிடம் மகஜர் கொடுத்தனர். ஜூன் 22-ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இந்திரா பதவி விலகக் கோரி மிகப்பெரிய பொதுக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. அதில் மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, ராஜ் நாராயண், மதுலிமாயி, எஸ். என். மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். று ஜூன் 23-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் சார்பில் வழக்கறிஞர் பல்கிவாலா அலகாபாத் தீர்ப்பின் அமுலை நிறுத்தி வைப்பதற்கான மனுவையும், தீர்ப்பை எதிர்த்த அப்பீல் மனுவையும் தாக்கல் செய்தார். நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் மதிய உணவு இடைவேளைக்குக்கூடச் செல்லாமல் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, 24-ஆம் தேதி பிற்பகல் 3-45 மணிக்குத் தீர்ப்பு கூறுவதாகத் தெரிவித்தார். அதன்படி அவர் மறுநாள் அளித்த தீர்ப்பில், "பிரதம் மந்திரி இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து நாடாளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அமுலை சில நிபந்தனை களுடன் நிறுத்தி வைக்கவும், அப்பீல் பைசல் செய்யப்படும் வரை இந்திராகாந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அந்தப் பதவிக்குரிய உரிமைகளை அனுபவிக்கலாம் என்றும் அவர் தொடர்ந்து பிரதம மந்திரி பதவியை வகிப்பதற்கு சட்ட பூர்வமான தடை எதுவும் இல்லை என்றும், ஆனால் நாடாளு மன்றத்தில் (பிரேரணைகள், திருத்தச் சட்டங்கள் முதலியவை களின் மீது ஓட்டு எடுக்கும்போது ஓட்டு போடுவதற்கு அவருக்கு உரிமை கிடையாது 'என்றும், நாடாளுமன்ற கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளலாம் என்றும், இந்த நிபந்தனைகளை நீக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் பெஞ்சுக்கு பிரதம மந்திரி மனு செய்து கொள்ளலாம் என்றும், முழுமையான நிபந்தனையற்ற இடைக்காலத் தடை உத்தர விற்கும் நிபந்தனையுடன் இப்போது அளிக்கப்பட்டுள்ள இடைக் காலத் தடை உத்தரவிற்கும் நடைமுறை சம்பந்தப்பட்ட வரையில் வித்தியாசம் ஒன்றுமில்லை என்றும் நீதிபதி தீர்ப்பு