பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இந்தியாவிலேயே முதல் தீர்மானம் ! அவசர நிலையைப் பிரகடனம் செய்தது பற்றி வானொலியின் மூலம் இந்திரா காந்தி 26-ஆம் தேதி காலையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- "இந்தியாவின் சாமானிய ஆடவர்கள், மகளிர் நலனுக் காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே ஆழ்ந்த, பரவலான சதி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நிச்சயமாகக் கருதுகிறேன். ஜனநாயகத்தின் பேரால் ஜனநாயகம் செயல்படுவதையே குலைக்க முயற்சி செய்யப் படுகிறது. கலகம் செய்யும்படி நம்முடைய ராணுவத்தையும் போலீசரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களில் நாம் உறுதியுடன். மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவி புரிந்துள்ளன. பொருளா தாரத்தைப் பலப்படுத்தவும், ஏழை மக்கள், வருமானம் உள்ளவர்கள் உட்பட பல்வேறு இன்னலைப் போக்க மேற்கொண்டு எடுக்கப்பட விரை கைக் புதிய நிர்ணயமான பிரிவினரின் வேண்டியு பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை அறிவிப்பேன். கூடிய அவசர நிலை பிரகடனம், சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜைகளின் உரிமைகளை எவ்வகையிலும் பாதிக்காது என்று உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். விரைவில் இந்தப் பிரகடனத்தை கைவிட்டுவிடும் வகையில் உள்நாட்டு நிலைமைகள் துரிதமாக அபிவிருத்தி அடையுu என்று நம்புகிறேன்." தி.மு.கழகம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் துடித் தெழுந்தது! நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்; ஜூன் மாதம் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது.