பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 நெஞ்சுக்கு நீதி 469 ஒருநாள் இடைவெளியில் கூட்டிய போதிலும் மொத்தம் செயற்குழு உறுப்பினர்களில் 63 பேர் கலந்து கொண்டார்கள். முதல் நாள் இரவு தலைமைக் கழகத்தினருடன் கலந்துரையாடி விட்டு விடியற்காலை நான்கு மணி அளவில் என் கைப்பட த் தீர்மானத்தை எழுதி, மறுநாள் செயற்குழு விவாதத்திற்கு வைத்தேன். அந்தத் தீர்மான வாசகமாவது:- "உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த மாபெரும் ஜன நாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில் அண்மைக் காலமாக ஆளுங் காங்கிரசார் கடைப்பிடிக்கும் போக்கும் பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும் ஜன நாயக ஒளியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு, தி. மு. கழகச் செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது. 6 இந்திய நாடு சுதந்திரம் பெற்று, விடுதலைக்கான வெள்ளி விழாவும், குடியரசுப் பிரகடனத்திற்கான வெள்ளி விழாவும் கொண்டாடி முடித்த பிறகும், அடித்தளத்து மக்கள், ஏழை, எளியோர், பாட்டாளிகள் வாழ்வில் நிம்மதியற்ற நிலையே தான் நீடித்து வருகிறது. அவர்களுக்காகப் பெரிய சாதனைகளை உருவாக்கப் போகிறோம் என்று மத்திய அரசினரால் அறிவிக்கப் பட்ட பட்டியல்கள் ஏராளமெனினும், பயன் எதுவும் ஏற்பட வில்லை. தனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஆளுங் காங்கிரசும், குறிப்பாக திருமதி இந்திரா காந்தி அவர்களும் முக்கியமாக வறுமையை விரட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றப் போவதாகக் கூறிவந்தனர். அந்தப் பணிக்கு எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வறுமை நீங்கி ஏழையெளிய மக்கள் மகிழ்வெய்தி, இந்திய நாடு மேன்மையுறுவது எல்லா கட்சிகளுக்கும் உடன்பாடான கொள்கைதான். குறிப்பாக, தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில் இந்திரா காந்தி அறிவித்த முற்போக்குத் திட்டங்களை வரவேற்றுப் பாராட்டித் தனது ஒத்துழைப்பையும் நல்கியிருக் கிறது. வங்கிகளைத் தேசியமயமாக்குவது மன்னர் மானியத்தை ரத்து செய்வது போன்ற செயல்களை வற்புறுத்தியதும், வரவேற் றதும் தி.மு. கழகம் என்பதை நாடறியும். இது போன்ற இரண்டொரு அறிவிப்புக்களால், வறுமை தொலைந்து விட வில்லை. வறுமையை அகற்ற முடியாததற்கான பழியை எதிர்க்