பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 நெஞ்சுக்கு நீதி கட்சிகளின் மீது சுமத்துகிற பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வந்த இந்திரா காந்தி அவர்கள், இப்போது திடீரென உள் நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் அவசரப் பிரகடனத்தைச் செய்துவிட்டு, அந்த அந்த அவசரச் சட்டத்தையொட்டி, ஏழை யெளிய பின்தங்கிய மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் இல்லாமல், இதுவரை இருந்து வந்த ஜனநாயகச் செயல்முறையிலேயே ஏழை களுக்கான நன்மைகளை வழங்குவதை எந்தச் சூழ்நிலை தடுத்தது? நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலத்துடனும், இந்தியாவில் பல மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியுடனும் வலிவோடு விளங்குகிற இந்திரா காந்தி, முற்போக்குத் திட்டங்களை ஏழைகளுக்கான நன்மைகளை நாடாளுமன்ற சட்டசபைப் பெரும்பான்மையோடு சட்டமாக்க முடியவில்லை; ஆகவே உள் நாட்டுப் பாதுகாப்புக்கான அவசரச் சட்டமென்னும் ஆட்கொல்லி சட்டத்தைப் பிரகடனம் செய்கிறேன் என்பது வேடிக்கையான விபரீத வாதமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் தமிழகத்தில் அல்லது கேரளத்தில், அல்லது குஜராத்தில், ஏழை எளியோரை வாழவைக்கும் சட்டங்களை மறுக்கின்ற அரசுகள் கின்றனவா? இருக் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், ஏழை எளிய மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தமிழகத் தி.மு.க. அரசு நிறைவேற்றத் துடிக்கிற திட்டங்களை அங்கீகரிக்காமல் முட்டுக்கட்டை போடுவதில் மத்திய அரசு முனைப்பாக இருந்து வருகிறது என்பது தான் உண்மையாகும். - சதி, உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு, பொய்யின் நிழலில் நின்று கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்குவதற்குத் திட்டம் தயாரித்து, அந்தத் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான போலிக் காரணங்களை தேடியலைந்து, வீண் அபவாதங்களை வாரியிறைத்து — எடுத்ததற்கெல்லாம் வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்குவாதிகள் என்ற சொற்கணைகளைப் பொழிந்து காலாகாலத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் திருமதி இந்திரா காந்தி நேற்றையதினம் (26-6-75) அதிகாலையில் சர்வாதிகாரத்திற்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார்.