பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 நெஞ்சுக்கு நீதி வழங்க வேண்டும். அதுவே,--இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்கும் காரியமாகும் என்று தி.மு.க. செயற்குழு சுட்டிக் காட்டுவதோடு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தச் செயற்குழு பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு விடுக்கும் இந்த வேண்டுகோள் வெற்றி பெற இந்திய நாட்டு மக்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டு மக்கள், காந்தி அடிகள் நெறியை மறவாமலும், ஜனநாயகச் சின்னமாம் அறிஞர் அண்ணாவின் பாதையிலிருந்து தவறாமலும், தமக்கே உரிய தனிப் பண்பாட்டுடன் அமைதியான முறையில் வன்முறை தவிர்த்த வழியில் சட்டம், ஒழுங்குக்கு ஊறு நேரா வண்ணம் நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு, காண வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது." தி.மு.கழகம் தமிழகத்தில் ஆளுங் கட்சியாக இருந்த போதிலும் துணிந்து மத்திய அரசை ஆளும் இந்திரா காந்திக்கு எதிராக இப்படிப்பட்ட தீரமிக்க தீர்மானத்தை அன்றைய தினம் நிறைவேற்றியது இந்திய அளவில்-ஏன் உலக அளவில் கூட பெரிதும் வியந்து பாராட்டப்பட்டது. அகில இந்தியாவிலும் நெருக்கடி நிலையை - இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை அன்றைய தினம் கண்டித்து முதன்முதலாக கட்சி ரீதியாக தீர்மானம் நிறைவேற்றி நிறைவேற்றி வெளியிட்ட பெருமையும் தி. தி.மு. கழகத்திற்குத் தான் உண்டு. கழகம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய தற்கு மறுநாள்; உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிற யாரும், அதை எதிர்த்து வழக்கு மன்றங்களுக்குப் போக முடியாது, அதற்கு உரிமை கிடையாது என்ற வகையில் ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்தார். கைது செய்யப்பட்டது ஏன் என்ற காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையென மற்றொரு அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.