பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 நெஞ்சுக்கு நீதி அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது கூறிய தாவது:- இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலைமைகளைக் கண்டு இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட பெரிய தலைவர்கள் - தங்களுடைய வயதான காலத்தில் - 'தங்களுடைய பேரப் பிள்ளைகள் சுதந்திர இந்தியாவில் உலவுவார்கள்;-எல்லா விதமான உரிமைகளோடும் உலவுவார்கள்' என்று எண்ணிக் கொண்டிருந்த பழைய காலத்துத் தேசியவாதிகள்-கண்கலங்கும் காட்சியைக் காண்கிறோம்! இந்தக் காட்சி இருக்கலாமா? பெரிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் -மிகப் அறிஞர்- அவர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், 'பத்திரிகைச் - சுதந்திரம் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதே' என்று எழுதியதை நேற்று இரவு படித்தேன்; எண் கண்கள் கலங்கின! இப்படி, இந்தியத் திருநாட்டில், தேசத் தலைவர்கள்- தேசியப் பாரம்பரியத்தில் வந்தவர்கள்-பல ஆண்டுக் காலம் தங்களை சிறைவாழ்விற்கு ஒப்படைத்துச் சுதந்திரம் பெறுவதற் காகப் பாடுபட்டவர்கள்-சிறைச்சாலைகளில் கஞ்சிக் கலயங்களை ஏந்தியவர்கள் சித்திரவதைக்கு ஆளானவர்கள் - எல்லாம், 'கிடைத்த சுதந்திரம் என்னவாகுமோ' என்கின்ற அச்சத்தால் - ஐயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! தூக்க மில்லாமல் வாடுகிறார்கள்! கண்ணீர் மல்குகிறார்கள் கதறுகிறார்கள்! - - அவர்களுடைய கண்ணீரைத் துடைக்கத் தலைமை யமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் முன்வர வேண்டாமா என்று கேட்கத் தான் நாட்டு மக்களுடைய உணர்வை அவருக்கு எடுத்துச் சொல்லத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அலகாபாத் தீர்ப்பை யொட்டி-அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய சில பந்தனைக் ஜனநாயகத்தை உலகம் பார்த்து வேதனைப்படுகின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தான் கழகம் கவலைபோடு உற்று நோக்குகிறது! செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன! அதற்கு ஆங்கிலத்தில் 'சென்சார்' என்று பெயர்; 'சென்சார்' என்றால்- இதுவரையில் சினிமாவில் தான் அதுபற்றிக் கேள்விப்பட்டிருக் கிறோம்; அதுவும், 15,000 அடி படம் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தால் அதிலே இரண்டாயிரம் அடியை வெட்டி விட்