பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 நெஞ்சுக்கு நீதி எழுத்தை எழுத்தால் சந்திப்போம்- சொல்லைச் சொல்லால் சந்திப்போம் - என்கின்ற தெம்பு இருக்கின்ற காரணத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தகுந்த அவதூறான விஷயங்கள் வருமானால், 'அவைகளுக்கென்று ஏற்கனவே உள்ள சட்டங்கள் அவைகளைப் பார்த்துக் கொள்ளும்' என்று கருதுகிறோம்! ஆகவே, 'முதலமைச்சரைப் பற்றி எழுதாதே-அவரைப் பற்றி எதுவும் சொல்லாதே' என்று சொல்லுகின்ற அளவுக்கு எழுதுகோல்களை முறிக்கின்ற சட்டத்தை நாக்குகளை அறுக்கின்ற சட்டத்தை -கழகம் விரும்பவில்லை! - ஆகவே, எங்களுடைய மனச்சாட்சி இடம் தருகின்ற வரையில், அந்தத் தாக்கீதுகளை நாங்கள் நிறைவேற்றுவோம்! மனச்சாட்சியையும் கடக்கின்ற நிலைமைகள் வருமே யானால், "யோசிப்போம்' என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தர் ஒரு ஒரு வாலிபனைச் சந்தித்தார்; அந்த வாலிப னிடத்தில் புத்தர் சொன்னார்- "ஏ, வாலிபனே! வீணையினுடைய நரம்பை மேலும் அதிகமாக முடுக்கினாலும் அல்லது மேலும் அதிகமாகத் தளர்த்திவிட்டாலும் நல்ல இசையைக் கேட்க முடியாது" என்று! வீணையில் நரம்பை அதிகமாக முடுக்கினாலும் நல்ல இசையைக் கேட்க முடியாது; அதிகமாகத் தளர்த்தி விட்டாலும் நல்ல இசை கிளம்பாது; அது எந்த அளவு முடுக்கப் பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு இருந்தால் தான், நல்ல இசை கிளம்பும்! அதிகமாக முடுக்கப்பட்டு விட்டால்-சர்வாதிகாரம்! அதிகமாகத் தளர்த்தப்பட்டு விட்டால்-பழைய காலத்து மன்னர்களுடைய ஆட்சி! இன்றைக்கும் நாம் விரும்புவது, சர்வாதிகாரத்திற்கும் பழங்கால மன்னர் ஆட்சிக்கும் இடையிலே உள்ள ஜன நாயக ஆட்சி! வீணை நரம்பில் இனிய நாதம்-இன்ப நாதம் -எழிலிசை. கிளம்ப வேண்டுமேயானால், நரம்பு எந்த அளவுக்கு முடுக்கப் பட வேண்டுமோ அந்த அளவுக்கு முடுக்கப்பட வேண்டும்!