பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கடமை வீரரும் கர்ம வீரரும் மறைந்தனர்! நெருக்கடி நிலையை நிலையை எதிர்த்து நான் கடற்கரையில் பேசியதை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் வாதிகள் கழக அரசைக் கலைக்க வேண்டுமென்று குரலெழுப் பினார்கள். அதற்கு நான் திருச்சி மாவட்டத்தில் கரூரில் நண்பர் பராங்குசம் அவர்களுக்கு நடைபெற்ற மணிவிழாவிலே கலந்து கொண்டபோது பதிலளித்தேன். அது வருமாறு: 16 "இன்று நாடு இருக்கும் நிலைமையில் சர்வாதிகாரம் என்று சொன்னாலே சிலருக்குக் கோபம் வருகிறது. நாம் யாரையும் சர்வாதிகாரி என்று சொல்லவில்லை. சர்வாதிகாரியாக ஆகிவிடக் கூடாது என்றுதான் வேண்டுகிறோம். போகிற போக்கைப் பார்த்தால் சர்வாதிகாரம் எங்கே வந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. கூட்டம் நடக்கிற நேரத்தில் வானம் கருக்கத் தொடங்கினால் கூட்டம் ஏற்பாடு செய்த தோழர்கள் எங்கே மழை வந்துவிடுமோ என்று அஞ்சுவதைப் போல அஞ்சுகிறோம்.மாடு; தும்பை அறுத்துக்கொண்டு வெளிக் கிளம்பிவிட்டால் எங்கே முட்டி விடுமோ என்று சந்தேகப்படுவதைப் போல இன்று இந்தியாவிலே இருக்கிற நிலைமைகளைப் பார்க்கும்போது சர்வாதிகாரம் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். வராது என்று எங்களுக்குச் சொல்லுங்கள். நம்பிக்கை அளியுங்கள். வராது என்பதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று கேட்கிறோம். ஜனநாயகம் வாழ வேண்டும் என்பது குற்றமா? நாங்கள் வேண்டாம் என்று வெறுப்பது இந்திரா காந்தியை அல்ல; சர்வாதிகாரத்தை! வேண்டும் என்று விரும்புவது ஜனநாயத்தை; ஆனால் இங்கே இருக்கிற சில கட்சிக்காரர்கள் இதை வைத்துக்கொண்டு கருணாநிதி மத்திய அரசோடு-இந்திரா காந்தியோடு மோதுகிறார். எனவே இந்த அரசைக் கலைத்து விட வேண்டுமென்று சொல்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வேன். கழக அரசை ஏன் கலைக்க வேண்டும்? ஒருவேளை தமிழகத்திலே உள்ள சில எதிர்க்கட்சிக்காரர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் கழக அரசை இந்திரா காந்தி கலைத்து விடுவார்களானால், சிம்மாசனத்தில் உட்கார்ந்