பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 486 நெஞ்சுக்கு நீதி பக்கத்தில் ராஜாஜி நினைவகம் அருகில் அடக்கம் செய்யலாம் என்ற கருத்தினை நான் தெரிவித்தேன். அப்போது இரவு மணி எட்டாகி விட்டது. மழை வேறு. இருந்த போதிலும் நானே எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று பார்ப் பதற்காக கிண்டிக்குச் சென்றேன். என்னுடன் பேராசிரியர், ப.உ.சண்முகம், மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர். கிண்டிக்குச் சென்று அங்கே இருட்டில் காரைத் திருப்பி கார் வெளிச்சத்திலேயே இடத்தைப் பார்வையிட்டுத் தேர்ந்தெடுத்தோம். இரவோடு இரவாக மரங்களும், புதர்களும் நிறைந்த அந்த இடம் மறுநாள் சவ அடக்கம் செய்வதற்கேற்ற வகையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அமர்வதற் கேற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு அவர்களுக்கு அரசியல் மாறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் நாட்டுக்காக பாடுபட்ட பெருமகன் என்ற அளவில் கழக ஆட்சி பெருமுயற்சி எடுத்துக்கொண்டு அவரது இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தது. காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சென்னை வந்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் உமாசங்கர் தீட்சித், கே. பிரம்மானந்த ரெட்டி, சி.சுப்பிரமணியம், கே.ஆர்.கணேஷ் ஆகியோர் வந்தனர். பிரதமரை விமான நிலையத்தில் நானும் கவர்னரும் வரவேற்று நேராக ராஜாஜி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றோம். பிரதமர் காமராஜரது உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அக்டோபர் 3-ந் தேதி மாலை 3.25 மணிக்கு ராஜாஜி மண்டபத்தினை விட்டு சவ ஊர்வலம் புறப்பட்டது. ராஜாஜி மண்டபத்து வராந்தாவிலிருந்த காமராஜர் உடலை நானும், அமைச்சர் ராஜராமும், ராணுவ வீரர்களின் துணையோடு தோள் கொடுத்து தூக்கி வந்து அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் வைத்தோம். கொட்டும் மழையிலே பெருந்தலைவர் காமராஜரின் சவ ஊர்வலம் மக்கள் கடலிலே ஊர்ந்து சென்றது. கர்நாடக முதலமைச்சராக அர்ஸ் அவர்களும் எங்களுடன் இருந்த தேவராஜ் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மறுநாள் என்னைச் செய்தியாளர்கள் சவ சந்தித்து காமராஜக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா என்று கேட்ட போது, காமராஜர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு