பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 நெஞ்சுக்கு நீதி ☐ சந்தித்து விட்டு வந்த பிறகும் கடற்கரையில் நெருக்கடி நிலையை எதிர்த்துத் தி.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பிறகும் சஞ்சீவி ரெட்டி அவர்கள் என்னை வந்து சந்தித்தார். கழக அமைச்சரவை ராஜினாமா செய்து விட்டு காமராஜர் தொடங்கும் ஜன நாயகம் காத்திடும் இயக்கத்தில் கழகம் துணை நின்று நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடு வதற்கு தயாராக இருப்பதாக கழகத்தின் நிலையை திரு. ரெட்டி அவர்களிடம் நான் தெரிவித்தேன். அவரும் எனது கருத்தைக் காமராஜர் அவர்களிடம் தெரிவித்து இருவரும் கலந்து பேசி இறுதியாகக் கழக அமைச்சரவை ராஜினாமா செய்யக் கூடாது என்பதில் காமராஜர் கண்டிப்பாக இருப்பதாகக் கூறிவிட்டார். தலைவர்களை விடுவிக்கவும், நெருக்கடியை எதிர்த்துப் போராடவும் காமராஜர் அவர்கள் ஆயத்தம் செய்து கொண்டு வருவதை திரு. ரெட்டியார் அவர்கள் அவர்கள் வாயிலாக நானறிந்து அதற்கான ஆதரவை அவ்வப்பொழுது காமராஜரது அறிவுரைப் படி நானும் இயன்ற அளவு வழங்கி வந்தேன். ஆனால் மிகவும் குன்றி விட்ட அவரது உடல் நிலை உடனடியாக ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு இயலாமல் அவரைத் தடுத்து நின்றது. அந்தக் கால கட்டத்துச் செய்திகளைத் தான்* திரு. ரெட்டியார் எனக்கனுப்பிய மணிவிழா வாழ்த்தில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். காமராஜர்,உடல் நலிவுற்றுப்படுக்கையில் படுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரும் நானும் சென்னையில் ஒரு பொது இடத்தில் சந்தித்து மூன்று மணி நேரம் பேசினோம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாக்டர் வீட்டு மாடியில் தான் அந்தச் சந்திப்பு மாலை ஆறரை மணி முதல் இரவு ஒன்பதரை மணி வரையில் நடந்தது. காமராஜர் அவர்களுக்கும் எனக்கும் சிகிச்சை அளித்த டாக்டர் அவர். அவர் வீட்டில் தான் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அந்த அரசியல் சந்திப்பு நிகழ்ந்தது. காமராஜருடன் நெருங்கியிருந்த நண்பர்களில் ஒருவரான நண்பர் கலிவரதன் அவர்கள் கூட அந்தச் கூட அந்தச் சந்திப்பு குறித்து இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாள் விழாவின் போது மயிலைப் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார். மூன்று மணி நேரம் நானும் கர்மவீரர் காமராஜர் அவர் களும் நிகழ்த்திய அந்த உரையாடலில் எங்கள் இருவரது உள்ளுணர்வும் ஒன்று கலந்தன. ஆங்கிலத்தை அறவே அகற்றி விட்டால் அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக் கொள்ளும். என்று அவர் எச்சரித்துச் சொன்னது என்றைக்கும் மறக்க முடியாத