பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 நெஞ்சுக்கு நீதி மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அவருடைய பிரேதத்தை பார்வைக்கு வைத்து அங்கேயே எரித்து நினைவுச்சின்னம் கட்டுவது என்று தான் முதலில் முடிவு செய்திருந்தோம். சிலர் ராஜாஜிஹாலுக்கு கொண்டு போய் வைக்கவேண்டும், முதலமைச்சரிடம் கேளுங்கள் என்று சொன்னார்கள். இதை எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதே வினாடியில் முதலமைச்சர் அவர்கள் காமராஜர் வீட்டிற்குள் வந்து விட்டார். வந்ததும் முதல் வேலையாக இங்கே கூட்டத்தை சமாளிக்க முடியாது. உடனே ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு போக வேண்டும்; என்று நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஏதோ கனவு கண்டதைப் போலச் சொன்னார்கள். எங்கள் மனதை எப்படி தெரிந்து கொண்டார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எனக்கும் என்னுடைய சகாக்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களுக்கும் இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்றே புரியவில்லை. பிறகு ராஜாஜி ஹாலுக்கு வந்து எவ்வாறு வைக்க வேண்டு மென்று அவைகளை எல்லாம் சரி செய்து, மேடை போட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், அங்கேயே மந்திரி சபை கூடியது என்ற வகையில் எல்லா அமைச்சர்களும் அங்கேயே வந்து விட்டார்கள். அவரை எங்கே வைப்பது என்பதற்கு காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டுமென்று சொன்னார் கள். அதே க்ஷணத்தில் முடிவு செய்தது மாத்திரமல்லாமல் அன்று இரவே முதலமைச்சர் அவர்கள் அவருடைய வண்டியிலேயே என்னையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி காரியதரிசியையும் அழைத்துக் கொண்டு, மழை பெய்து கொண்டிருக்கும் போதே இரவு 8 மணிக்கு முதலமைச்சர் அவர்களும், பொதுப்பணி அமைச்சர் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்றோம். . அவர்களே செய்திருக்கலாம். எங்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டியதில்லை; இருந்தாலும் எங்களையும் அழைத்துக் கொண்டு, அந்த இடத்தில், அந்த இரவில் வெளிச்சம் இல்லை. கார்களை எல்லாம் திருப்பி நிறுத்தி விளக்கைப் போட்டு இடத்தைத் தேர்ந்தெடுத்து அன்றிரவே அங்குள்ள மரங்களை எல்லாம் அகற்றி இரவெல்லாம் அமைச்சர் அவர்கள் தூக்க மில்லாமல் அங்கேயே இருந்து ஏற்பாடுகளை எல்லாம் செய்தார் கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று எங்க ளுக்கு தெரியவே இல்லை. கட்சியைப் பற்றி நான் எண்ண வில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்றுமே இதை மறக்க