பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி497 கழக ஆட்சி கலைச்கப்படுவதற்கு முன்பு 1975-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25, 26, 27, 28 ஆகிய நாட்களில் கோவை மாநகரில் நடைபெற்ற கழகத்தின் ஐந்தாவது பொது மாநில மாநாடு வரலாற்றுச் சிறப்புக்குரிய மாநாடாகும். கழகத் தலைமைப் கோவை கோவை மாநில மாவட்ட மாநாடுகள் அண்ணாவின் மறைவுக்குப்பிறகு பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டபிறகு, மாநாடு வரையில் கழகத்தின் சார்பில் தொடர்ச்சியாக முறையே ஒவ்வொரு மாவட்டத்திலும் நடை பெற்று வந்தன. 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் திருச்சியில் அந்த மாவட்ட ஐந்தாவது மா நாடு சி.பி.சிற்றரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டினை எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அதற்குப் பிறகு அதே 1970-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19, 20 ஆகிய. நாட்களில் வடஆற்காடுமாவட்ட ஐந்தாவதுமாநாடு வேலூரில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு ஏ. வி. பி. ஆசைத்தம்பி அவர்கள் தலைமை தாங்கினார். மதுரைமுத்து அவர்கள் அந்த மாநாட்டினைத் திறந்து வைத்தார். அடுத்து 1971-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்ததை யொட்டி கழக மாநாடு எந்த மாவட்டத்திலும் நடைபெறவில்லை. 1972-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12, 13 ஆகிய நாட்களில் ராமனாதபுரம் மாவட்ட ஐந்தாவது மாநாடு ராஜபாளையம் நகரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சகோதரர் அரங்கண்ணல் தலைமை தாங்கிட, நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசாமி திறந்து வைத்தார். அந்த மாநாட்டில் அண்ணா அவர்களின் திருவுருவப் படம் என். வி. என். அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் திங்களில் 8,9 ஆகிய நாட்களில் செங்கற்பட்டு மாவட்ட ஐந்தாவது மாநாடு காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. எஸ். எஸ். தென்னரசு அவர்கள் அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். ஆலடி அருணா திறப்பாளர், திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள் அண்ணா அவர்களின் படத்தினை அந்த மாட்டில் திறந்து வைத்தார். அடுத்து மே மாதத்தில் தஞ்சை மாவட்ட ஐந்தாவது மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்து கே.டி.எஸ். மணி தலைமை தாங்கிட சி.டி. தண்டபாணி அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்தார். தந்தை பெரியார்