பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 நெஞ்சுக்கு நீதி ☐ சந்திக்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்றும் இரட்டிப்புச் செலவாகாமல் குறைக்கலாமென்றும் அரசு அதிகாரி கள் இரண்டு முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட இயலாத நிலைமையைத் தவிர்க்கலாம் என்றும் கருத்தறிவித்து 71-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடனேயே சட்டப் பேரவைத் தேர்தலையும் நடத்துவதென்று முடிவெடுத்தது. இன்றுள்ள நிலையில் ஜன நாயக ரீதியாக பொதுத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்றும், அந்தத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கேற்ப சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்து வதோடு, போதிய முன்னறிவிப்பு தந்து; வரும் மார்ச் திங்களில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை ஒருங்கிணைத்து நடத்தவேண்டும் என்றும் கருத்தறிவிக்கிறது. (முன்மொழிந்தவர்: சாதிக், வழிமொழிந்தவர்: ஓ.பி. ராமன், ரெங்கனாதன் எம்.எல்.ஏ.) மாநாட்டிலே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து நான் என்னுடைய முடிவுரையிலே நாடாளுமன்றத் திற்கும் சட்டப் பேரவைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டு மென்று கேட்டு பிரதமருக்கு கழகத் தோழர்கள் அனைவரும் தந்தி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். கழக மாநாடு கோவையில் நடைபெற்ற அதே தேதியில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநாடு சண்டிகார் நகரிலே நடைபெற்று, அந்த மாநாட்டிலே நாடாளுமன்றத் தேர்தலை ஓராண்டு காலத் திற்கு ஒத்திப்போட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. "எமர்ஜென்சி"யின் காரணமாக இந்திரா காங்கிரஸ், எதேச்சாதிகாரமாகப் பெற்றுக்கொண்ட பயன்களில் இதுவும் ஒன்று!