பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 இந்தியாவில் இரு தீவுகள் "நாடாளுமன்றத் தேர்தலை ஓராண்டிற்கு ஒத்திப்போட வேண்டும் என்று சண்டிகாரில் நடைபெறும் இந்திரா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பற்றி கருத்து என்ன?" என்று கோவை ரயில் நிலையத்தில் நான் புறப்படும் போது று என்னைச் சந்தித்து நிருபர்கள் கேட்டார்கள். "எனது கருத்துக்களை நேற்றைய மாநில மாநாட்டில் விளக்கமாகக் கூறியுள்ளேன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் அந்தத் தீர்மானத்தை எந்த நிலையில் - பாரபட்சமற்ற முறையில் பாராளுமன்றம் அணுகுகிறது என்பதை ஜனநாயகத்தில் பற்றுள்ள அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இது இந்தியாவைப் பொறுத்த எதிர்பார்ப்பாக மட்டுமல்லாமல், அகில உலக அரசியல் அரங்கின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. எனவே, நாடாளுமன்ற முடிவினைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என்று அதற்கு நான் கருத்து தெரிவித்தேன். " கோவை மாநில மாநாட்டை மாநாட்டை முடித்துவிட்டு சென்னை வந்ததும், அன்றைய காலை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு கோவை மாநாட்டைப் பற்றி "கோவையில் தி. மு. கழகம் நடத்திய ஐந்தாவது மாநில மாநாடு சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது பெரிய அரசியல் மாநாடு" என்றும், "மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுகிழமையன்று மதிய உணவிற்கான இடைவேளை விடப்படவில்லை. மாநாட்டுப் பந்தலுக்குள் மக்கள், காலை 10 மணி முதல் சுமார் பன்னிரண்டு மணிநேரம் அமர்ந்திருந்தனர்" என்றும் எழுதியிருந்தது. இரண்டாவது பெரிய மாநாடு என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடக் காரணம், அகில இந்திய அகில இந்திய அளவில் அளவில் ஆவடியில் 1955-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டைச் குறிப்பிட்டதாகும். சேர்த்து 1976-ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதியன்று நாடாளு மன்ற கழக உறுப்பினர்களின் கூட்டம் நாடாளுமன்றத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-