பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 நெஞ்சுக்கு நீதி ☐ . நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்றும் பதில் கூறினேன். 'ஓம்மேத்தா அவர்கள் காங்கிரசின் உள்கட்சிப் பிரச்சினைகளில் தி.மு.கழகம் தலையிடுகிறது என்று பேசியிருப்ப தாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இன்னொரு கட்சியின் பிரச்சினைகளில் தலையிட வேண்டிய அவசியம் தி. மு.கழக அரசுக்கோ தி.மு. கழகத்திற்கோ என்றைக்கும் இருந்ததில்லை என்று அதற்கு நான் பதில் கூறினேன். வள்ளுவர் 8-1-76 அன்று தலைமைச்செயலகத்தில் கோட்டத் திறப்பு விழா சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை பெப்ரவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்களில் சிறப் பாக நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டு, அந்தச் செய்தி பத்திரிகைகளுக்கும் தரப்பட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற ஒரு விவாதத்திற்கு குறுக்கிட்டுப் பதிலளித்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் இந்தியாவில் கட்டுப்பாடற்ற இரண்டு தீவுகள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். கழகம் ஆட்சிபுரிந்த தமிழ் நாட்டையும், ஸ்தாபன காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த குஜராத் மாநிலத்தினையும் மனதில் கொண்டுதான் அவர்கள் அவ்வாறு தெரிவித்தார்கள். இந்தக் குற்றச்சாட்டைப்போலவே, பிரதமர் அவர்கள் நபர்வாரி திட்ட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்று நாடாளுமன்றத்தில் கூறினார். அதற்கும் நான் விவரமாக, திட்டங் களுக்கு மத்திய அரசு தந்த உதவி போதுமானதல்ல என்றும், சொந்த முயற்சியால்தான் தமிழக அரசு மேலோங்கி நிற்கிறது என்றும். 1965-66-ஆம் ஆண்டில் நபர்வாரி வருமானத் தில் ஏழாவது இடத்திலிருந்த தமிழகம் அப்போது நான்காவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு நீண்ட விளக்கமான பதிலை அளித்தேன். தமிழகத்திலும் குஜராத்திலும் நடைபெற்ற ஆட்சிகள் "எமர்ஜென்சி"யை ஏற்காத கட்சிகளின் தலைமையில் இருந்த ஆட்சிகள் என்பதால் மத்திய அரசின் இத்தகைய குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாக நேர்ந்தது என்பதுதான் உண்மை. குஜராத்தின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பாபுபாய் படேல் அவர்களும் நானும் கலந்து கொண்ட காமராஜர் சிலைத் திறப்புவிழா வடசென்னையில்