பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20-1-76 அன்று நடைபெற்றது. நெஞ்சுக்கு நீதி 501 அந்த விழாவிலே பா. ராமச்சந்திரன், பி. ராமமூர்த்தி, குமரி அனந்தன், வி. தண்டாயுதபாணி, டாக்டர் சந்தோஷம், அரு. சங்கர், கே.ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியும் மத்தியில் இருந்த இந்திரா காங்கிரஸ் ஆட்சியாளர் களுக்கு ஆத்திரத்தை அதிகமாக்கிற்று. எனவே, தமிழக அரசைக் குற்றஞ்சாட்டி, பிரதமரும், மத்திய அமைச்சர்களும் ஏதாவதொன்றைச் சொல்லுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வழியில் அந்த வழியில் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்தரெட்டி 'மிசா' சட்டத்தை குறிப்பிடாத காரியங்களுக்கெல்லாம் தமிழகத்தில் பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். அது குறித்தும் நிருபர்கள் என்னிடம் கருத்து கேட்டனர். "எது எதற்கு 'மிசா' சட்டத்தைப் பயன்படுத்த வேண்டு மென்று குறிப்பிட்டு, மத்திய அரசிடமிருந்து வந்த தாக்கீதுபடி தமிழக அரசால் 'மிசா' சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. உணவுக் கலப்படம், பதுக்கல் வியாபாரிகள் மீது 'மிசா' சட்டம் உபயோகப்படுத்தப்படுகிறது. அதைப்போன்றசமூகக் குற்றவாளி கள் என்று கருதப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் பேர்வழிகள் 150க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கினர்கள். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் கட்சி சார்பற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மிசா சட்டத்தைப் பயன்படுத்தி; கள்ளச் சாராயம் காய்ச்சியதாகக் கைதான கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசு எங்களுக்கு உத்தரவு பிறப்பித் துள்ளதால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்" என்று நான் பதில் கூறினேன். நிருபர்கள் தொடர்ந்து, "மத்திய அரசுக்கு எதிரான, 'அனாமதேய'த் துண்டுப் பிரசுரங்கள் தமிழ் நாட்டில் பிரசுரிக்கப் படுவதாக மத்திய அமைச்சர் பிரம்மானந்தரெட்டி கூறியிருக் கிறாரே? என்று கேட்டனர். அதற்கு நான், "அவரே அதை 'அனாமதேயத்' துண்டுப் பிரசுரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட அனாமதேயத் துண்டுப் பிரசுரங்களை வெளி யிட்டவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்” என்று பதில் கூறினேன். அரசியல்வாதிகளைக் கைது செய்யவேண்டும்; கடத்தல் காரர்களையும், கள்ளச் சாராயப் பெரும் வியாபாரிகளையும் கைது செய்யக்கூடாது என்ற மத்திய இந்திரா அரசின் உத்தரவு