பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 நெஞ்சுக்கு நீதி சமூக விரோதிகளை அடக்கவே 'எமர்ஜென்சி' கொண்டு வரப் பட்டது என்ற இந்திராகாந்தியின் வாதத்தை வலுவிழக்கச் செய்தது. அவசர நிலைமைக்குப் பிறகு கைதாகி காவலில்வைக்கப் பட்டிருந்த தலைவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று பிரதமரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒரு தேதி குறிப்பிட்டுச் சொல்வது கடினம். முதலில் அந்தத் தலைவர்கள் வன்முறைகளைக் கைவிடுவார்கள் என்பது' உறுதியாக வேண்டும். அதன்பின்னரே அடுத்த நடவடிக்கை களைச் சிந்திக்க இயலும்" என்று கூறினார். அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பரூவா அவர்கள் பம்பாயில் சிவாஜி பூங்காவிலே பேசும்போது "பிரதமர் இந்திராகாந்தி ஆர். எஸ். எஸ். இயக்கத்தைத் தடை செய்து விட்டார். தி.மு.கழகமும் ஒழுங்காக நடக்காவிட்டால் அதற்கும் அதே கதி நேரலாம்' என்று கூறினார். அதே பரூவா அவர்கள் டெல்லியிலே பேசும் போது "மத்திய அரசுதான் தேசிய அரசு, இந்தியாவின் மெட்ரோ பாலிடன் அரசு; மற்ற மாநில அரசுகள் எல்லாம் முனிசிபல் அரசுகளே" என்று கூறினார்.