பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 நெஞ்சுக்கு நீதி நமது ஆளுநர் அவர்கள் கல்விக்கூட " விழாக்களில் உரையாற்றும்போது உற்சாகம் மேலிடக் க் குறிப்பிட்டது எனக்கும் உனக்கும் கூட நன்றாக நினைவிருக்கிறது. 'சிறுமிகளே, நீங்கள் எல்லாம் இந்திராகாந்தி போல எதிர் காலத்தில் ஆகவேண்டும். சிறுவர்களே, நீங்கள் எல்லாம் கருணாநிதி போல், காமராஜர் போல் ஆகவேண்டும்" என்று பலத்த கையொலிக்கிடையே கூறுவார். என்னைத் தலைவர்கள் வரிசையில் சேர்த்தார் என்பதற்காக இதைக் குறிப்பிடவில்லை. நான் கிடக்கிறேன், சாதாரணமானவன்; என்னை விட்டு விடு! இந்திய நாட்டுப் புகழ்மிக்க பிரதமர் இந்திராகாந்தி போலவும், தியாகச்சுடர் காமராஜர் போலவும் எதிர்காலத்தில் குழந்தைகள் ஒளி விட்டுத் திகழ வேண்டும் என்பது போலத்தான் இன்றைய செய்திகளும் நாளைய வரலாறுகளாக மாறிட வேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். செய்திகள், குழந்தைகளைப் போல! வரலாறுகள், தலைவர்களைப் போல! ஒரு சாராருக்கு களிபேருவுவகை வழங்கும் செய்தி, மற்றொரு சாராருக்கு மாறாக மனநோயைத் தரவல்ல தாகவும் விளங்கிடக்கூடும். இன்று 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் வியாழக்கிழமை! இந்த நாளில் சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்படுகிறது. இது செய்தியா? வரலாறா? என்று கேட்டால் அதற்குத் தெளிவாகக் கிடைக்கக்கூடிய பதில் 'வரலாற்றுச் செய்தி" என்பதுதான். இப்படி ஒரு கோட்டம் அமைத்திடும் எண்ணம் எவ்வாறு எழுந்தது தெரியுமா? பூம்புகார் உருவாக்கியதும், பாஞ்சாலக்குரிச்சி கண்டதும், புதிய எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதும் உணர்ந்த நல்லோர் சிலர், மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற முறையீடொன்றைத் தந்தனர் என்னிடம்! க மறுநாளே நானும் அறநிலைய அமைச்சர் கண்ணப்பனும் மயிலைக்குச் சென்றோம். கோயிலைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது. அதற்கென கருத்துரை வழங்கிட குழு ஒன்றும் உருவாக்கப் பட்டது. இதற்கிடையே அந்தக் கோயிலை அன்னியில் நகரில் நடுப் பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசையும் தோன்றியது. அதுபற்றி