பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 கழக ஆட்சி கலைக்கப்பட்டது! வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவுக்கான நாள் நிச்ச யிக்கவும் விழா ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும் ஜனவரி எட்டாம் நாள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடினோம் என்பதைக் குறிப்பிடத் தொடங்கி யதுமே - கழக . ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆட்சியில் திறப்பு விழா நடைபெற்ற அந்த நிகழ்ச்சிகளுக்கு என் என் நினைவுகள் பறந் தோடி விட்டன. அந்த நினைவுகள் தான் கடந்த அத்தியாயம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டன. ஏப்ரல் திங்களில் இருந்து மீண்டும் 'ஜனவரி திங்களுக்கே வருகிறேன். இடம் இடம் என் இதயத்தில் எத்தனையோ எழுத்தாளர்கள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நண்பர்களாகவும் பெற்றுள்ள சிலரில் சிலரில் "சாவி" ஒருவர். நெருக்கடி நிலையில் எழுத்தாளர்கள் எல்லாம் மிரட்டப்பட்டுக் கைகள் கட்டப் பட்டிருந்த போது கூட ஏப்ரல் மாதம் நடந்த வள்ளுவர் கோட்ட விழாவில் நான் அழைக்கப்படாததை உருக்கமாகச் சுட்டிக்காட்டி "தினமணி கதிர்" இதழில் எழுதிய எழுத்தாளரும் அவர் ஒருவரே யாகும். அவருக்கு ஜனவரி திங்கள் 29-ஆம் நாள் அறுபதாம் ஆண்டு பிறந்த நாள் விழா ! அந்த விழாவுக்கு நான் வருவ தாக ஒப்புக் கொண்டிருந்தேன் - ஆனால் அதற்கு முதல் நாள் சற்று உடல் நலிவு. மருத்துவர்கள் இரண்டு நாள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருந்தார்கள். அதனைக் குறிப்பிட்டு சாவி அவர்களுக்கு எனது இயலாமையைத் தெரிவித்தேன். "தாங்க முடியாத காய்ச்சலோடு சுபாஷ் சந்திரபோஸ் திரிபுரா காங்கிர சுக்குச் சென்று படுத்துக் கொண்டே தனது உரையை ஆற்றினார்" என்று சாவி அவர்கள் எனக்கு பதில் அளித்தார். "காய்ச்சலாக இருந்தால் நானும் வந்து படுத்துக் கொண்டே உரையாற்றி விடுவேன். ஆனால் எனக்கு வந்துள்ள நோய் அடிக்கடி தொல்லை தரக்கூடிய வயிற்றுப் போக்கா