பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 519 ஆண்டு விழாவில் யிற்றே!' எனக் கூறினேன். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாவி அவர்களின் அறுபதாம் கலந்து கொண்டேன். "சாவி 60" என்ற சிறப்பு மலரினை அமைச்சர் ராஜாராம் வெளியிட அதன் முதல் படிவத்தை எம். ஏ.எம். இராமசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். ஏ. எல். சீனிவாசன், சௌந்தரா கைலாசம், கி.வா.ஜகந்நாதன், கல்கி ராஜேந்திரன், சோ. ராமசாமி, சிவசங்கரி ஆகியோர் எனது தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் சாவியின் எழுத் தாற்றலையும், எழுத்துலக அனுபவங்களையும் புகழ்ந்து போற்றி வாழ்த்தினர். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்ச ரோடு பழகுகிறோம் என்றில்லாமல் அரசியல்வாதியாகவும் எழுத்தாளராகவும் இருக்கிற ஒரு நண்பரோடு பழகுகிறோம் என்ற முறையில் என்னிடம் நட்புறவு கொண்டுள்ள சாவி அவர்களின் சிறப்பியல்புகளைப் பாராட்டுவதாக அந்த விழாவில் நான் குறிப்பிட்டேன். எந்த நிலையிலும் நான் அவருடன் பழகிய அந்தக் கால கட்டத்தில் ஆட்சி பீடத்தில் இருப்ப வனாயிற்றே என்ற எண்ணம் எங்கள் நட்புக்குக் குறுக்கே நிற்கவில்லை. அந்த விழா நிகழ்ச்சி முடிவுற்று வீட்டுக்குச் சென்ற போது இன்னும் இரண்டொரு நாட்களில் ஆட்சி கலைக்கப் பட்டு விடக் கூடும் என்று சில நண்பர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய முகத்தில் அவர்களாலேயே மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அச்சம் பரவியிருந்ததை என்னால் உணர முடிந்தது! அன்று வெளி வந்த வெளி வந்த முரசொலி நாளிதழில் "வீரர்கள் பின் தொடரட்டும்" என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதினேன். ஏற்றுக் கொண்ட கொள்கையைக் காத்திடவும் நிறைவேற்றிடவும் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் சலனமும் எனக்கு ஏற்படவில்லை. ஒரு பாது இந்த அத்தியாயத்தை எழுதும்பொழுது ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். இலங்கையில் சிங்கள வெறியர்களாலும் இராணுவத்தினாலும் இனப் படுகொலைக்கு ஆளாகிக் கொண் டிருக்கின்ற தமிழ் மக்களைக் காப்பாற்றி அவர்களுக்குப் காப்பு அரண் நிலையானதாக அமைவதற்காக நடைபெறும் முயற்சியில் ஒரு அங்கமாக நியூயார்க் தமிழர்கள் டாக்டர் பஞ்சாட்சரம் போன்றவர்கள் நியூயார்க்கில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து