பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

☐ நெஞ்சுக்கு நீதி 523 அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவது அன்றிரவு முழுவதும் பெரும் வேலையாகி விட்டது. இரவு எட்டு மணியிருக்கும் - அதற்குள்ளாக முதலமைச்சர் பந்தோபஸத்துக்கு என்றிருந்த என்றிருந்த போலீசார் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டனர். என்னுடைய துணைவியர்கள் தயாளுவானாலும், ராஜியானாலும் எவ்விதக் கலக்கமுமின்றி மிகச் சாதாரண நிகழ்ச்சியாக அதனை எடுத்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் என் சகோதரிகள், பிள்ளை கள், பெண்கள், மருமகன்கள், எல்லோருமே அதனை ஒரு திடுக்கிடத் தக்க நிகழ்ச்சியாகக் கருதவில்லை. அதனால் அவர்கள் உள்ளத்தைக் கடுகளவு வேதனையும் தீண்டவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஒரு விழா நிகழ்ச்சி போல எண்ணிக் கொண்டிருந்தோம். "போலீஸ் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்; பார்க்க வேண்டுமாம்" உங்களைப் என்று வீட்டில் நீண்டகாலமாகப் பணியாற்றும் செயல் மணி ஓடி வந்து சொன்னான். கைது செய்ய வந்திருப்பது போல் தெரிகிறது என்றும் கூறினான். 'வரச்சொல்' அதிகாரிகள்! என்றேன்! வந்தார்கள் போலீஸ் “என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?" எனக் கேட்டேன். "இல்லை! உங்களை இல்லை" என ஒரு அதிகாரி அழுது கொண்டே சொன்னார். "யாரைக் கைது செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். "உங்கள் மகன் ஸ்டாலினை!” என்று கூறினார்கள்: தழுதழுத்த குரலில். கண்ணீர் சிந்தியவாறு! “அவன் ஊரில் இல்லையே - நாளை வருவான்" என்றேன். மாலையில்தானே “வீட்டில் இருக்கிறாரா? என்று "சர்ச்" செய்து பார்க்கும் படி உத்திரவு!" என்றார்கள். "தாராளமாகச் 'சர்ச்' செய்யுங்கள்" என்றேன்.