பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 நெஞ்சுக்கு நீதி ☐ அன்றிரவு மீண்டும் போலீசார் பல லாரிகளில் வந்து வீட்டை முற்றுகையிட்டனர். என்னைத்தான் தேடி வந்திருக் கிறார்கள் என்று நான் பயணத்திற்குத் தயாரானேன். "உங்களை யல்ல; உங்கள் மருமகன் மாறனைத் தேடி வந்திருக்கிறோம்" என்றார்கள். விடுவார்களா மாறனை? 1975-ல் நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தியதையொட்டி தி.மு.க. தனது எதிர்ப்பைத் தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்தியபோது-'முரசொலி' இதழில் "இட்லராகிறார் இந்திரா" என்ற கார்ட்டூனை வெளியிட்டவனா யிற்றே மாறன்! அந்தக் கார்ட்டூன் வெளிநாட்டு வார ஏடுகளில் கூட பிரசுரிக்கப்பட்டு இந்திராவின் சர்வாதிகாரத்தைத் தமிழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பதற்குச் சான்று காட்டி எழுதப்பட்டதே; மிசாச் சட்டம் விட்டுவிடுமா? விட்டனர். அதனால் மாறனை டெல்லியில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும் வந்த வுடன் போலீசுக்குத் தகவல் அனுப்புவதாகவும் கூறினேன். போலீசார் விமான நிலையம் சென்று காத்திருந்தனர். ஆனால் மாறன், கமலநாதன், மாரிசாமி ஆகியோர் ஐதராபாத் வந்து இறங்கி வெவ்வேறு வழிகளில் ஊர் வந்து சேர்ந்தனர். மாறன் சென்னை வந்ததும், ஐ.ஜி.க்குப் போன் செய்தேன்; "நீங்கள் தேடுகிறவர் தயார்!" என்று! உடனே போலீஸ் வேன் வந்தது! கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டு வாசலில் குழுமி மாறனின் துணைவியும், பிள்ளைகளும், தாயாரும் என்னதான் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களின் கலங்கிய கண்கள் அவர்களது வெந்து நொந்த உள்ளங்களை வெளிப்படுத்திக் கொண்டுதா னிருந்தன. மாறனைக் கட்டித் தழுவி உச்சி மோந்து, "சென்று வா" எனச் சொல்லி போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்பினேன். கூடியிருந்தோர் வாழ்த்தொலி முழங்கினர் மாறன் விடைபெற்ற போதும்; ஸ்டாலின் விடைபெற்ற போதும்! அவை வாழ்த் தொலியாக இல்லை! எதேச்சாதிகார வெறியர்களை வீழ்த்துவதற்கு எழுந்த துளுரை போலத்தான் என் செவிகளில் ரீங்காரமிட்டது. போட் தொடர்ந்து கழகக் கண்மணிகள் மிசாக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட செய்திகள் கிடைத்த வண்ண மிருந்தன. ஆனால் அவர்கள் சிறையில் அடைபட்டிருப்பதைக் கூட ஏடுகளில் வெளியிட முடியாத அளவுக்குத் தடை டிருந்தது கவர்னரின் ஆட்சி! ஆம்; இந்திரகாந்தியின் ஏஜெண்டு களாத இருந்த கவர்னர்கள் அந்த அம்மையார் ஆட்டி வைக்கப் படுகிறபடி ஆடுகிற பொம்மைகளாகத்தானே இருந்தார்கள்!