பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 சட்டங்கள் பட்டபாடு! தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கழக அமைச்சரவையைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று அமுல்படுத்தும் உத்தரவை மத்திய அரச பிறப்பித்தது. 31-ஆம் தேதி மாலையில் மத்திய அமைச்சரவை கூடி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ், தமிழ்நாடு மந்திரிசபையை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்வதாக குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்கு பரிந்துரை செய்து, அன்று இரவு குடியரசுத் தலைவர் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவுப்படி ஒரு மாநில அரசு தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கருதினால், அந்த அமைச்சரவையை நீக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அப்போது தமிழக அரசை தொடர்ந்து நடத்த முடியாத நிலை இருந்ததா? அப்போது தமிழக சட்டப்பேரவையில் தி.மு.கழகத்திற்குப் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நிலையிலே இருந்ததா என்றால்-அப்போது கழகத்திற்கு சட்டமன்றத்திலே இருந்த இடம் மொத்தம் 234 பேர்களில் தி.மு. கழகம் 167, அ.தி.மு.க. 17, ஸ்தாபன காங்கிரஸ் 13, இந்திரா காங்கிரஸ் 7, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 5, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி 2, முஸ்லிம் லீக் 6, பார்வர்டுபிளாக் 7. சுதந்திரா 4, தமிழரசுக் கழகம் 1, சுயேச்சை 1, அவைத் தலைவர் 1, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் 2, காலியான இடம் 1. இந்த அளவிற்கு தி.மு. கழகம் பெரும்பான்மையாக இருந்த போதிலும் கழக அமைச்சரவை கலைக்கப்பட்டது. க அமைச்சரவையைக் கலைத்ததோடு தமிழ்நாடு சட்ட சபையையும் கலைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 31-ஆம் தேதி காலையில் காந்தி காந்தி விழாவில் உரையாற்றிய கவர்னர் அதுவரையில் தனது சிபாரிசை செய்யவில்லை. அவ்வாறு சிபாரிசு செய்திருந்தால் அந்த