பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 நெஞ்சுக்கு நீதி போலீஸ்வேன்களிலும், ஜீப்களிலும் எடுத்துக்கொண்டு போய் ஊர் ஊராக பிப்ரவரி முதல் நாளே வினியோகித்தனர். அதற்கு நான் உடனடியாக முரசொலியில் என்னுடைய சொத்துச் களையும், உறவினர் சொத்துக்களையும், அதற்கான கடன்களையும் ஏற்றுக்கொண்டு முப்பது கோடி ரூபாய் அல்ல, முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளத் தயாரா என்றும், அந்தத் தொகையையும் கூட கழகத்திற்கு நான் அளித்திடத் தயார் என்றும் பதிலளித்தேன். அதற்கு யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை. கழக அரசு கலைக்கப்பட்டது பற்றி எம்.ஜி. ராமசந்திரனிடம் கருத்து கேட்டபோது "தி.மு. கழக அரசு விலக்கப்பட்டது தைரியமான நடவடிக்கையாகும். இதை அ.தி.மு.க. வரவேற்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்திக்கு அ.தி.மு.க.வின் முழு ஆதரவு உண்டு' என்று கூறினார். 234 பேர் கொண்ட அவையில் 167 பேர்களை தன்னகத்தே கொண்டிருந்த கழக அமைச்சரவையைக் கலைத்தது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல் என்று அப்போது. எம்.ஜி.ஆர். கூறினார். "கழக ஆட்சியை ஏன் கலைக்க சிபாரிசு செய்தேன்" என்று கவர்னர் கொடுத்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதியன்று வைத்தார்கள். ஆட்சியைக் கலைத்தற்கு நாடாளுமன்றத்தில் தி.மு. கழகத்தோடு சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், இந்திய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. ஜனவரி 31-ஆம் தேதி தமிழக அரசைக் கலைத்த மத்திய அரசு பிப்ரவரி 3-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் ஆயுளை ஓராண்டு காலத்திற்கு நீடித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தைத் தாக்கல் செய்தது. அதே பிப்ரவரி 3-ஆம் தேதி அன்று கழக அமைச்சரவை மீது விசாரணை நடத்துவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களைக் கொண்டு விசாரணைக் கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அதுபற்றி நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஓம் மேத்தா கூறும்போது, "1972-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன், தி.மு.க. அமைச்சரவை மீதான புகார்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்தார். மொத்தம்