பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 நெஞ்சுக்கு நீதி அச்சமிலா மனிதரும் அரசியல் அரங்கத்தில் ஆடுகிற விந்தை என்ன விந்தை -அதை ஆதரிப்பார் சிந்தை என்ன சிந்தை? ஈரத்துணி உலருமுன் இடம் விட்டு இடம் தாவும் இலட்சியவாதிகளும் உண்டு -பணம் எண்ணுவதே இவர் செய்யும் தொண்டு -அந்த ஈரமிலா நெஞ்சுடையார் மாறுகின்ற காலம் வரை இங்கு இல்லை நல்லாட்சி என்று திசை எட்டினிற்கும் கூறு வலம் சென்று! நெருக்கடி நிலைமையின்போது மாநில சட்டசபைத் தேர்தலை மத்திய அரசு நினைத்தால் தள்ளிவைக்க அரசியல் சட்டத்தின் 152-வது பிரிவு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தி.மு.கழக அமைச்சரவை நீடிப்பதற்கு காலம் இருந்தபோதிலும், ஆட்சியைக் கலைத்த மத்திய அரசு 1970-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்ற கேரள சட்ட சபை தேர்தல் 1975-ஆம் 21-ஆம் ஆண்டு அக்டோபர் தேதிக்குள் மீண்டும் நடத்தியிருக்க வேண்டும். மாறாக ஆறு மாத காலத்திற்கு கேரள சட்டசபையின் ஆயுட்காலத்தை நீடித்து பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி னார்கள். காரணம், கேரளத்தில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அச்சுதமேனன் அரசு நெருக்கடி நிலையை அப்போது ஆதரித்த அரசாக இருந்தது. எனவே கேரளத்திற்கு ஒரு விதி, தமிழகத்திற்கு ஒரு விதி, ஜன நாயகம் படுகொலை செய்யப்பட்டது. என்று பிரதமர் இந்திராகாந்தி குடும்பத்தினருடன் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று சென்னைக்கு வந்தார். கிண்டியில் கழக அரசு கட்டி முடித்த காமராஜர் நினைவு மண்டபத்தைத் திறந்து வைக்கவும், பிப்ரவரி 15-ஆம் தேதியன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவும் வந்தார். 14-ஆம் தேதி மாலையில் நடைபெற்ற காமராஜர் மண்டபம் திறப்பு விழாவில்" கலந்துகொண்டு. அதனை இந்திராகாந்தி திறந்து வைத்தார்,