பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 நெஞ்சுக்கு நீதி நடிகவேள் எம். ஆர். இராதா, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பழைய காங்கிரஸ் கட்சியினர் மிசாக் கைதிகளா யினர். மாநில முழுவதுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக் கானோர் மிசா சட்டப்படி அடைக்கப்பட்டிருந்தார்கள் என்றாலும் கூட-சென்னை சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டவர் களைத்தான் சிறை அதிகாரிகளும், கான்விக்ட் வார்டர்களும், சிறைச்சாலையின் பெரிய அதிகாரிகளின் முன்னிலையில் அடித்து நொறுக்கிச் சித்ரவதை செய்தனர். ாஸ் சென்னைச் சிறையில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து அந்தச் சிறைக் கொடுமையின் காரணமாக சிறையிலேயே பிணமான கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எழுதிய "டைரி" L அச்சாகி வெளிவந்துள்ளதைப் படித்தால் இப்போதும் நமது நெஞ்சு எரிமலையாகும்! அந்தக் கொடுமை குறித்து விசாரிக்க 1977-ஆம் ஆண்டில் மத்தியில் இருந்த ஜனதா ஆட்சியினால் நியமிக்கப்பட்டிருந்த கவர்னர் பிரபு பட்வாரி அவர்கள் நீதிபதி இஸ்மாயில் கமிஷனை அறிவித்தார் அந்தக் கமிஷன் அறிக்கையில் சிறையில் நடந்த கொடுமைகள் அனைத்தும் விளக்கப்பட்டன. மிசாக் கைதிகளுக்கு சோறுடன் மண்ணையும் சிறுநீரையும் கலந்து வழங்கிய அக்கிரமங்கள் எல்லாம் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் நுழைந்து அரசியல் மிசா கைதிகளை இழுத்துப் போட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து உதைத்த அநியாயங்கள் எல்லாம் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டன. வித்யாசாகர் என்ற சிறை அதிகாரிதான் இத்தனைக்கும் காரணம் என இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டியது. ஆனால் நண்பர் எம்.ஜி. ராம சந்திரன் முதல்வரானவுடன் அந்த அதிகாரி வித்யாசாகருக்குப் பதவி உயர்வு கொடுத்து அவரைக் கௌரவித்தார். சார்பில் அச்சியேற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிதிபதி இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை இப்போது படித்தாலும் சென்னைச் சிறையில் அதிகாரிகள் நடத்திய அந்த மிருக வெறி கொண்ட செயல்கள் குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அரசாங்க மாநிலத்தில் மற்ற சிறைகளில் இருந்த மிசாக் கைதிகளைக் காண. அவர்களது நெருங்கிய உறவினர்கள் அனுமதிக்கப் பட்டார்கள்; வாரம் ஒரு முறை!