பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நெஞ்சுக்கு நீதி 541 ஆனால் சென்னைச் சிறையில் இருந்த மிசாக் கைதிகளைப் பார்க்க அவர்களது பெற்றோர்களோ, உறவினர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. சிறையில் இருக்கும் அந்த உடன் பிறப்புக்களின் இல்லத்தினர் ஒவ்வொரு நாளும் என்னை வந்து சந்தித்து கண்ணீர் வடித்துக் கதறுவார்கள். இதற்கிடையே சிறையில் நடைபெற்ற சித்ரவதை நிகழ்ச்சிகளும் வெளியே பரவத் தொடங்கி விட்டது. ஏறத்தாழ முப்பது நாட்கள் வரையில் சென்னை சிறையில் இருந்தவர்களின் கதி என்ன என் பதே எங்களில் யாருக்கும் தெரியாது. கழகத்தினர் வீடுகளிலே இருந்து ஆண்களும் பெண்களும் அழுது புலம்பியவாறு என்னை முற்றுகையிட்டனர். ஓரிரு நாள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். முடியவில்லை. ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள் பிற்பகல் நானே மாநிலப் அதிகாரி அருள் அவர்களுக்கு 'போன்' காலைக்குள் சிறையில் இருக்கும் மிசாக் தற்கு அவர்களது உறவினர்களுக்கு விட்டால் - சிறைச்சாலை வாசலில் நான் சாகும்வரையில் உண்ணா நோன்பு மேற்கொள்வேன்" என்று அவரிடம் அறிவித்தேன். அன்று மாலையே சென்னைச் சிறையில் உள்ள உள்ள மிசாக் கைதி களைக் காண்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. போலீஸ் தலைமை செய்தேன். செய்தேன். "நாளைக் கைதிகளைக் காண்ப அனுமதி அளிக்கா ஒரு மாதத்திற்குப் பிறகு சிறையில் மாறனையும் ஸ்டாலினை யும் பார்க்கக் குடும்பத்தோடு சென்றேன். மற்ற உடன் பிறப்புக்களைப் பார்க்க அனுமதி இல்லை. அப்போதுதான் தெரிந்தது மாறனுக்கு உடல் நலிவு ஏற்பட்டு, 'ஜன்னி' கண்டு- பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி ! அதனால் சிறையில் ஸ்டாலினை மட்டுமே பார்த்தோம். ஸ்டாலினைச் சுற்றி இரண்டு சிறை அதிகாரிகள் ! நான்கு சி.ஐ.டி.கள்! முழுக்கைச் சட்டை போட்டுக் கையை யிருந்தான். காரணம்; அடிபட்ட காயங்கள் தெரியக் கூடாது என்பதற்காக சிறை அதிகாரிகள் உத்தரவு அப்படி! "அடித்தார்களாமே! உண்மையா?” என்று கேட்டேன். மூடி "இல்லை" என்பது போலத் தலையாட்டினான். ஆனால் கண்கள் மின்னின ! "அடித்தார்கள்" என்று சொல்லியிருந்தால், மீண்டும் சிறையில் உள்ள அனைவருக்கும் அன்றே அடி விழுந்திருக்கும்.