பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 35 ☐ காங்கிரசுடன் ஒப்பிடும்போது தி.மு.கழகம், புதியதொரு அமைப்பான போதிலும் அண்ணாதுரை அவர்களின் கட்சிச் செல்வாக்கு, நேரு அவர்களின் செல்வாக்கிற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. 1967 பொதுத் தேர்தலுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னால் 1964-ஆம் ஆண்டு நேரு மறைந்தார் என்பதை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். அவருடைய சக தோழர்கள், அவருக்குப் பின் யார் என்பதிலும் அமைச்சரவை யைத் திரும்ப அமைப்பதிலும் உட்பூசல் சச்சரவு எல்லாம் ஏற் படுமென எண்ணினார்கள். இதன் விளைவு 1967 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட சீர்கேடான முடிவுகளின் மூலம் தெரிந்தது. எனவே தி.மு.கழகத்தின் தலைவர்கள், தங்களுடைய கட்சியின் எதிர்காலம் முழுமையான ஒற்றுமையிலேதான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் 1972-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பே கட்சியிலே ஒற்றுமை யற்ற நிலைமையேற்பட்டு அதனைச் சந்திக்கவேண்டிய சங்கடம் ஏற்பட்டுவிடும். இப்போதுள்ள முதலும் முதலும் முக்கியமானதுமான பிரச்சினை முதலமைச்சராக அடுத்து யார் வருவது என்பது பற்றிய தலைமைத் தேர்தலாகும். அதிலே முக்கிய தேவை அடுத்து வருபவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டுமென்பதோடு தேர்தலுக்குப் பிறகு முழுக்கட்சியின் ஒத்துழைப்பைப் பெற்றவராகவும் கட்சியை நடத்திச் செல்லக் கூடியவராகவும் இருக்கவேண்டும். இருதரப்பையும் திருப்தி செய்வதற்காக அரசுத் தலைமைப் பதவியையும் கட்சித் தலைமைப் பதவியையும் பிரிப்பதற்குரிய மோசமான எண்ணம் ஏற்படலாம். இந்த இரட்டை முறை தான் காங்கிரஸ் அமைப்பைப் பலவீனப்படுத்தியது. ஆகையால் அது தி.மு.க.வுக்கு நடைமுறைத் தற்கொலையாக அமையும். சட்டமன்றத்திலும் கட்சியிலும் எதிர்ப்புக்கு இடமற்ற ஒரே யொரு தலைமை அமைவதுதான் மக்களிடையே ஆதரவை அதிகரிக்க இன்றியமையாத ஒன்றாக இருக்கும்." மத்திய அரசுப் பொறுப்பில் இருந்து ஆற்றல் வாய்ந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவரும்-அரசியல் அரங்கில் புகழ் வாய்ந்தவரும் "இந்தப் பிரச்சினை குறித்து இவரது கருத்து என்ன?" என்று அரசியல் வித்தகர்கள் எதிர்பார்க்கக்கூடியா அளவுக்கு அறிவாளியாகத் திகழ்ந்தவருமான திரு. கே. சந்தானம் அவர்களின் எச்சரிக்கையின்படி அடுத்த பொதுத் தேர்தலில்