பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 நெஞ்சுக்கு நீதி ஒரு மாலை நேரம், முரசொலி அலுவலகத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். சட்டப்பேரவைத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களும், மேலவைத் தலைவராக இருந்த சி.பி.சிற்றரசு அவர்களும் என்னிடம் தனிமையில் பேச வேண்டுமென்று வந்தார்கள். தலைமைக் கழக மேலிடத் தலைவர்கள் கூடிக் கலந்து பேசியதாகவும், இப்பொழுதுள்ள நிலையில் நான் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாதென்று அவர்கள் கருதுவதாகவும், அதனைச் சொல்லி எனது பயணத்தை நிறுத்துவதற்காகவே இருவரையும் அனுப்பி யிருப்பதாகவும் சொன்னார்கள். "கழகத்தின் மூத்த மூத்த தலைவர் களான நீங்கள் இருவரும் சொல்கிற காரணத்தால் உங்கள் பேச்சைத் தட்டக்கூடாது என்ற நிலையில் சுற்றுப் பயணத் திட்டத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன். அறவே ரத்து செய்ய இயலாது" எனப் புலவர் அவர்களிடமும், சி.பி.சி. அவர்களிடமும் கூறினேன். அவர்களும் அந்த அளவிற்கு நான் ஒத்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து விட்டுச் சென்றார்கள். இதற்கிடையில் இலட்சிய நடிகர் நண்பர் எஸ். எஸ். ஆர். அவர்களும், எனது அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரனும் மத்திய அரசின் அதிகாரிகள் வகுத்த வியூகத்திற்குள் சிக்கிக் கொண்டனர். கழகத்தில் உள்ளவர் களை; யார் யாரைக் கைது செய்ய வேண்டுமென்று ஆள் காட்டுகிற வேலையிலே பண்ருட்டி இராமச்சந்திரன் ஈடுபட்டார். அதுமட்டுமல்ல; கழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் அவர்களை அச்சுறுத்தி, மத்திய அரசின் அடக்குமுறைகளிலிருந்து தப்பிட வேண்டுமானால் கழகத்திலிருந்து விலகிவிடுங்கள் என்றும் எச்சரிக்கிற பணியிலே ஈடுபட்டார். கழகத்தின் மேல்மட்டத் தலைவர்கள் சிலர் கழகத் தலைமைப் பொறுப்பிலே இருந்து நான் விலகிக் கொண்டால் - கட்சிக்கு மேலும் ஆபத்து ஆபத்து வராது வராது என்றும், கட்சியை மத்திய அரசு தடை செய்யாமல் விட்டு விடுமென்றும் அவர்களாகவே கூடிப் பேசி, ஒருநாள்; முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன் வீட்டில் அதுகுறித்துக் கலந்து பேசி முடிவெடுக்க என்னையும் அழைத் தனர். அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த எஸ்.எஸ்.ஆர்., “கலைஞர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவே