பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 நெஞ்சுக்கு நீதி என்பது பற்றி பகுத்தறிவுச் செம்மல் எழுதியுள்ள நூலை வாங்கிப் படிக்கவும். மா. சிங்காரவேலர் இந்த கேள்வி பதிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஏன் அனுமதி மறுத்தீர்கள் எனக் கேட்டேன். "நீங்கள் பேய், பிசாசு, பூதம் என்று எழுதும் போது அது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்" என்று கூறினார்கள். அதை நினைத்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரிய வில்லை. என் கலைத்துறை வாழ்வில் நான் திரைப்படங்களுக்கு எழுதி அதிலே சென்சார் குறுக்கிட்டதையும், 'மிசா' நேரத்தில் பத்திரிகையில் நான் எழுதியதில் சென்சார் தலையிட்டதையும் மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு நல்ல புத்தகம் எழுதிட முடியும். அந்த அளவிற்கு அன்றாடம் சென்சாருடன் போராட்டம் அமைதியான முறையில் நடத்திட வேண்டி யிருந்தது. பேசி கழகத்திற்கு வெளியே இந்த அளவிற்கு நிலைமைகளைச் சமாளிக்க வேண்டியிருந்த போது கழகத்திலே இருந்த மூத்த தலைவர்கள் சிலர் நான் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தனியாகப் முடிவெடுத்து, அதனை என்னிடம் நேரிலே சொல்வதற்கு முடியாமல், புலவர் கோவிந்தன் அவர்கள் மூலமாக கடிதத்தை என் சகோதரிகளிடம் சேர்ப்பித்தார்கள். ஒரு அந்தக் கடிதத்தின் பின்னால் எந்தெந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அக்கடித வாயிலாக புலவர் கோவிந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் நான் புலவர் அவர்களுக்கு ஒரு நீண்ட பதில் எழுதினேன், அந்தக் கடிதத்திலே நான் புலவர் அவர்களிடம், நீங்கள் இப்படி ஒரு இப்படி ஒரு கடிதம் எழுதுவதற்குப் பதிலாக எனக்கு ஒரு துளி விஷம் அளித்திருக்கலாம் என்றும், கழகம் நல்ல நிலைமையிலே இருந்தபோதெல்லாம் அதற்கு தலைவனாக இருந்து விட்டு, கழகத்திற்கு ஓர் ஆபத்து என்ற நேரத்தில் அதைவிட்டுப் போவது அழகாகுமா என்றும், என்னை முழுவதும் உணர்ந்த புலவரே அதனை எழுதலாமா என்றும் கேட்டிருந்தேன். நல்ல அரசியல்வாதி என்பவன் போர்க் கப்பலின் தளபதிக்கு ஒப்பானவன். அண்மையில் நடந்த ஒரு போரின்