பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கட்சிப் பெயரை மாற்றும் யோசனை ? 1976 -ஆம் ஆண்டு முழுதும் நெருக்கடி நிலைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. அன்றாடம் என்னுடைய பொழுது; காலையில் எழுந்தவுடன் நாளேடுகள் படித்து முடிப்பதிலேயே ஆரம்பமாகும். பிறகு ஒன்பது அல்லது பத்து மணி வரையிலே தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து பஸ்களிலும், வேன்களிலும் ஏறிக் கொண்டு கழக உடன்பிறப்புக்கள் நூற்றுக்கணக்கில் வருவார்கள். ஒவ்வொரு நாளும் தவறாமல் அவர்களைக் காண்பதில் எனது சோர்வெல்லாம் பறந்து போய்விடும். பஸ்களையும், வேன் களையும் வீட்டு வாசலில் நிறுத்தி அதிலே வந்தவர்கள் என் னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். மத்திய அரசால் பழிவாங்குவதற்கென்று போடப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணையில் வழக்கறிஞர்களை வைத்து வாதாடுகிற செலவுக்காக அவர்கள் ஒரு ரூபாய் என்றும், ஐந்து ரூபாய் என்றும், வழக்கு நிதியை அள்ளி அள்ளி வழங்குவார்கள். அவ்வாறு நாள் தோறும் கழகத்தினர் சென்னைக்கு என் இல்லம் நோக்கி வருவதையும், வழக்கு நிதி தருவதையும் சகித்துக்' கொள்ள முடியாத கவர்னர் ஆட்சி, அப்படி என்னைச் சந்திக்கப் புறப்படுகிற கழகத்தினரை அவர்களது ஊர்களிலேயே தடுத்து நிறுத்தும்படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டது. அதன் காரணமாக பஸ்களையும், வேன்களையும் வாடகைக்குத் தருவ தற்கு அவற்றின் உரிமையாளர்கள் மறுத்து மறுத்து விட்டார்கள். அந்த நிலைமையை ஆங்காங்குள்ள கழகத்தினர் சமாளித்த விதமே அலாதியானது! அவர்களது ஆர்வத்தை வெளிப் படுத்தக் கூடியது. திருப்பதிக்கு யாத்திரை போகிறோமென்றும், திருத்தணி கோயிலுக்குப் போகிறோம் என்றும் கூறி பஸ்களையும், வேன் களையும் வாடகைக்குப் பிடித்தனர். அவற்றில் குழந்தை குட்டி களுடன் குடும்பம் குடும்பமாக ஏறிக் கொண்டனர். திருப்பதி, திருத்தணிக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த வந்தவர்களைப் போல மொட்டையும் அடித்துக் கொண்டனர். சந்தனத்தை யும் தலை நிறையப் பூசிக்கொண்டனர். இல்லாவிட்டால் அவர்கள் திருப்பதி, திருத்தணியிலிருந்து சென்னை நகருக்குள் நுழைந்திட போலிசார் அனுமதிக்கமாட்டார்களே !