பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 553 பழுத்த பக்த சிரோன்மணிகளைப்போல என் வீட்டுக்கு வந்து சேருவார்கள். எனக்குத் தைரியம் கூறுவார்கள். "கவலைப்படாதே! நாங்கள் இருக்கிறோம்" என்று கண்கலங்க என் கைகளைப் பிடித்துக்கொண்டு உறுதி முழக்கம் செய்வார் கள். வழக்கு நிதி தருவார்கள். கூட்டமாக என்னுடன் நின்று குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூட இருந்த மேலிடத்துத் தலைகள் சில கலங்கிப் போய் கை பிசைந்து செய்வதறியாது திகைத்துப் போய் என்னையும் செயலற்றவனாக ஆக்கிட முனைந்தபோது -- அந்தக் கழகக் கண்மணிகள், மொட்டைத் தலையுடன் வந்து எனக்களித்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது! ஏ, அப்பா - அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு இந்தக் கழகம் ஏது? தினமும் அவர்களைச் சந்தித்து விட்டு முரசொலி அலுவலகம் செல்வேன். எழுதுவேன். தணிக்கைக்குத் தப்பிய எழுத்துக்களை முரசொலி வாயிலாக வெளியிடுவதற்கு உதவு வேன். அதன்பிறகு அன்பகம் செல்வேன். அமைச்சராக இருந்தோமே என்கிற அந்த நினைவையே மறந்து விட்டு நண்பர் சாதிக் பாட்சா அவர்கள் அன்பகத்தில் எல்லாக் கடமைகளையும் ஆற்றிடுவார். பேராசிரியர் வருவார். நாவலர் வருவார். மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்கள் சிலர் வருவார்கள். என்னையும் பேராசிரியரையும் தவிர மற்ற எல்லோருடைய முகத்திலும் எதையோ பறிகொடுத்துவிட்ட சோகம்தான் பரவிக் கிடக்கும். அதிக நேரம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தால் எனக்கே ஒரு கோழைத்தனம் வந்து விடுமோ என்ற அச்சம் பிறக்கும். ஒருநாள் அன்பகத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது மாநிலக் கட்சி களைத் தடை செய்ய இந்திரா அரசு உத்தேசித்திருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதை அறிந்த எம். ஜி. ஆர். அவர்கள் எம்.ஜி.ஆர். தனது கட்சியின் பெயர் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்று இருந்ததை "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என மாற்றிக் கொண்ட அனைவரும் அறிந்ததே! " நிகழ்ச்சி தி.மு.க.வையும் பெபர் மாற்றிக் கொள்வதே பாதுகாப் பானது என்று மூத்த தலைவர்கள் அழுத்தமாகக் கருத்தறிவித் தனர். அமைச்சர்களாக இருந்த சிலரும் ஆமாம் போட்டனர். தி.மு.க.வை அரசியல் கட்சியல்ல என அறிவித்து; கலாச்சாரக்