பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 555 வைத்தார்கள். நான் அந்த புகைவண்டியில் வருவதறிந்து ஒவ் வொரு புகைவண்டி நிலையத்திலும் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து இரவு முழுவதும் என்னைத் தூங்கிவிடாமல் வரவேற்றனர். அதன் காரணமாக புகைவண்டி பல மணி நேரம் தாமதமாகச் சென்றது. திருச்சியிலே வண்டீயிலிருந்து என்னை இறக்கி காருக்கு அழைத்துச் செல்லவே முடியாத அளவிற்கு பல்லாயிரக்கணக் கானவர்களின் கூட்டம். எப்படியோ கூட்டத்தில் போட்டு நசுக்கி காரில் கொண்டுபோய் என்னைத் தள்ளினார்கள். 15 திருச்சியிலிருந்து அம்பில் கிராமத்து திருமண வீட்டிற்கு சுமார் பதினைந்து மைல். காலை 9 மணிக்கு திருச்சியை விட்டுப் புறப்பட்டு 11 மணிக்குத்தான் அம்பில் சென்றடைந்தோம். மைல்களைக் கடக்க இரண்டு மணி நேரமா என்றால், அந்த அளவிற்கு வழியெங்கும் எங்கள் கார் நிறுத்தப்பட்டு, உடன் பிறப்புக்களின் அன்பிற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. பின்னர் 12 மணி அளவில் அம்பிலை விட்டுப் புறப்பட்டு 1} மணி அளவில் தான் பொன்மலை திருமண விழாவிற்கு வந்து சேர முடிந்தது. என்னுடைய காருக்கு நண்பர் காமாட்சி தான் சாரதி. அன்பில், அழகமுத்து, மாவட்டச் செயலாளர் எம்.எஸ். வெங்கடாசலம், ஆலந்தூர் பாரதி, வி.எம்.ஆர். சபாதி ஆகியோர் உடன் வந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு தங்குமிடத்தில் மாலைவரை 'கியூ' விலே நின்று விசாரணைக் கமிஷன் நிதியினைப் பெற்றுக்கொண்டேன். நிதி ஐயாயிரத்தைக் கடந்து ஆறாயிரத்தை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு வசூலாயிற்று. இரவு சென்னைக்குச் செல்ல ரயிலில் டிக்கெட் இல்லை என்று 6 6 மணி அளவில் செய்தி சொன்னார்கள். மறுநாள் காலையில் சென்னையிலே ஒரு திருமணத்திற்கு நான் தலைமை தாங்கியாக வேண்டும். எனவே வேறு வழியில்லாமல் 7 மணிக்கு நண்பர் காமாட்சியின் காரிலேயே, சென்னைக்குப் புறப் பட்டோம். சென்னையில் சேர்த்து இரவு 12 மணிக்கெல்லாம் விடுவதாகத் தெர்வித்தார். ஆனால் உளுந்தூர் பேட்டைக்கு முன்பாகவே கார் சக்கரத்தில் ஒன்று பழுதாகி விட்டது. உளுந்தூர்பேட்டையில் அதனை சரிசெய்துகொண்டு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தோம். மீண்டும் அதே சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஏதோ ஒரு தேய்ந்துபோன ஆணி குத்தி