பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 37 "அண்ணா அவர்கள் மறைந்தவுடன் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகியிருக்கிறது” என்று கூறி மனவேதனை அடைந்தேன். என்றாலும், இன்று அண்ணா மறைவு தவிர்க்க முடியாதது என்றும், இருட்டு நிலை நீங்கி வெளிச்சம் ஏற்பட்டு வருகிறது என்றும் கருதத்தக்க அளவுக்கு நிலைமை ஏற்பட்டு வருகிறது. அமைதி அடைகிறேன். காரணம், அண்ணாவின் மறைவு அண்ணாவின் நம் ஆட்சிக்கு ஆண்டு கிடைத்திராத கிறது ஆட்சிக்கு நாட்டில் எந்த இரண்டு ஆட்சிக்கும் அளித்திருக் ஒரு மகத்தான பெருமையை என்பதேயாகும். அப்படிப்பட்ட பெருமையான பின் அண்ணாவுக்குப் அந்த ஆட்சிபீடத்தில் அமர, கலைஞர் கருணாநிதி அவர்களை ஆட்சிக்குழுவினர் ஏகமன தாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். கலைஞரும் பதவி ஏற்றுக் கொண்டுவிட்டார். அதுமட்டுமல்லாமல் "நான் அண்ணாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே நடந்துகொள்வேன்" உறுதி கொடுத்தே பதவியில் அமர்ந்திருக்கிறார். என்று என்று இதுதான் நான் "இருட்டு வெளிச்சமாகிறது" சொன்னதின் பொருளாகும். கலைஞரின் ஆட்சி மக்களுக்கு அண்ணாவின் ஆட்சி போலவே பாராட்டுதலுக்குரிய ஆட்சி யாகவே நடந்துவரும் என்றே நான் நம்புகிறேன். அதனாலேயே தமிழ் மக்கள் அனைவரையும் கலைஞரது ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவேண்டுமென்று வேண்டிக் கொண்டேன்... வேண்டிக்கொள்கிறேன்...கலைஞர், அண்ணாவை விட யோசனையாளர் ஆனதால் அவர் தமிழர் நலனை-உரிமையை என்று எதிர் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார் பார்த்தே தமிழருக்கு உறுதி கூறுகிறேன். இந்த நிலையில் நமக்கு ஏற்பட்ட-ஏற்படக்கூடாத கெட்ட வாய்ப்பு என்னவென்றால், நாவலர் அவர்களுடைய ஊடலே யாகும். இந்த ஊடல் முற்றினால் கேடாக-பகையாக முடியுமே என்று கருதித்தான் ஏற்படக் கூடாத காரியம் என்கிறேன். மந்திரி பதவி, கலைஞருக்கோ நாவலருக்கோ சொந்த மான பதவிகள் அல்ல. அது தமிழர் சொத்தாகும். நாவலரும் வேண்டு கலைஞரும் டிரஸ்டிகளே. இதை இருவரும் உணர மென்று வேண்டிக்கொள்கிறேன். இதில் உரிமையோ மானமோ பொதுநலத்தில் பார்க்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். உரிமையோ மானமோ பார்ப்பது தத்துவப்படி சுயநலமாகும்.