பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 565 ஆனால் எஸ். எஸ். ஆர். மிகக்கடுமையானதும் தரக்குறை வானதுமான மொழிகளை உதிர்த்தார். இதற்கெல்லாம் மூல காரணமாக அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் நாளே அவர்களையெல்லாம் ஒரு பத்திரிகை அலுவல கத்தில் கட்டிவைத்து முடுக்கி விட்டிருந்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரால் ஒரு துண்டு அறிக்கை செயற்குழு கூட்டம் நடைபெற்ற அன்பகத்திற்கு வெளியே விநியோகிக்கப் பட்டது. அதில் என்னைத் தலைமைப் பதவியிலிருந்து விலகு மாறு கோரப்பட்டிருந்தது. மதியின் கருத்தையும், எஸ்.எஸ்.ஆர். கருத்தையும் செயற்குழுவில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. மதியழகன் வெளி நடப்புச் செய்து விட்டார். எஸ்.எஸ்.ஆர். மேலும் மேலும் வரம்பு கடந்து பேசிக் கொண்டேயிருந்தார். அவரைச் செயற்குழு உறுப்பினர்கள் அமைதிப்படுத்த முயன்றனர். முடியவில்லை. எனது வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாக உடனிருப்பார் என நான் கருதியிருந்த நண்பர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ஆரின் அந்தத் திடீர்ப் போக்கிற்கு முக்கிய காரணம், மத்திய அரசின் அச்சுறுத்தல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கட்டுப் படாமல் அவர் கூச்சல் போட்டுக் கொண்டேயிருந்த காரணத் தால் செயற்குழுவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அவர் அன்பகத்து வாசலில் கூடியிருந்த கழகச் செயல் வீரர்கள் மத்தியில் கழகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் தரமற்ற வார்த்தைகளைக் கூறிக் கூப்பாடு போட்ட காரணத்தால் அவருக்கும், கழகச் செயல்வீரர்களுக்கு மிடையே சிறு மோதல் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சி கூட அன்பகத்திற் குள்ளே செயற்குழு கூட்டத்திலிருந்த எங்களுக்கு முதலில் தெரியாது. இந்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்குப் பிறகு போலீஸ் அதிகாரி தேவாரம் தலைமையிலே போலீசார் அன்பக கட்டிடத்தை முற்றுகையிட்டார்கள். அங்கேயிருந்த கழகத் தோழர்கள் நாற்பதுக்கு மேற்பட்டவர்களை கைது செய்து கொண்டு போனார்கள். நெருக்கடி நிலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜேந்திரன் தாக்கப்பட்டார் என்ற வகையில் முதலில் போடப்பட்ட வழக்கு பின்னர் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சி என்ற அளவிற்கு குற்றப் பிரிவுகள் எல்லாம் எம். ஜி. ஆர். ஆட்சியில் அதிகரிக்கப் பட்டு, அந்த கொலை முயற்சி வழக்கிலே என்னையும் சேர்த்து நானும் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சித்தேன் என்ற அளவிற்கு வழக்குப் போடப்பட்டது! அந்த வழக்கு நீதி