பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 569 முறைப்படி சந்தித்து உண்மைகளை உலகுக்கு உணர்த்தவே தி.மு. கழகம் தயாராக இருந்தது. ஆனால் சர்க்காரியா கமிஷன், முறைப்படி தனது விசாரணையை நடத்திட முன்வரவில்லை. செப்டம்பர் திங்கள் சென்னையில் அந்தக் கமிஷன் விசாரணை தொடங்கியபோது, எங்களின் சார்பில் வழக்கறிஞர் சாந்திபூஷன் அவர்கள். நீதிபதி சர்க்காரியாவிடம் மனு ஒன்றைக் கொடுத்தார். என்மீதும், நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மாதவன், மற்றுமுள்ள அமைச்சர்கள், கழகத் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுப் புகார்களைக் கொடுத்துள்ள திரு. எம்.ஜி.ஆர். அவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல கழகத்தினருக்கு எதிராக சர்க்காரியா கமிஷனில் சாட்சி கூறுகிற எல்லோரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவுக்கு நீதிபதி சர்க்காரியா அவர்கள் மழுப்பலான ஒரு பதிலைத்தான் அளித்தார். (குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட வீராணம் திட்டம் குறித்த ஊழல் புகார்கள் கமிஷன் முன்னால் நிரூபிக்கப்படவில்லை என்று முடிவு எழுதப்பட்டதை நினைவு படுத்த விரும்புகிறேன்.) எல்லாப் புகார்களிலுமே சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டால் அந்தக் குற்றச்சாட்டுகள் பொடிப் பொடியாகி விடும் என்பது தெரிந்த காரணத்தாலோ என்னவோ அன்றைக்கு சர்க்காரியா விசாரணைக்கு சாட்சிகள் கமிஷன் அனைவரும் என்ற உள்ளாக்கப்படுவர் குறுக்கு உத்திரவாதத்தை வழங்கிட முன்வரவில்லை. அந்த மழுப்பலான பதிலை ஏற்றுக் கொள்ளாமல் -முறைப்படி சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு விசாரணை அனுமதிக்காத காரணத்தால்-அந்தக் கமிஷன் யிலிருந்து எங்களின் வழக்கறிஞர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்துவிட்டனர். ஒரு அதிகாரி- அவர் பெயர் வைத்திலிங்கம்-கழக ஆட்சி கலை கப்பட்ட அடுத்த மாதம் வேலை நீக்கம் செய்யப்பட்டு— மீண்டும் மூன்று மாதம் கழித்து வேலையில் சேர்த்துக்கொள்ளப் பட்டவர். எனது அந்தரங்கச் செயலாளராக இருந்தவர். வேலையை இழந்து மீண்டும் வேலையைப் பெற்ற அந்த இடை வேளையில் அவர் மிரட்டப்பட்டுஎனக்கு எதிராக சர்க்காரியா கமிஷன் முன்னால் ஆறரை மணி நேரம் சாட்சியமளித்தார் என்றால் இப்படி எதிரான சாட்சியங்களைத் திரட்ட நெருக்கடி