பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 நெஞ்சுக்கு நீதி என்று - பிரதமர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வியின் அடிப்படையிலே பிரதமர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எத்தகைய ஒருமுகமான போக்கை வடித்தெடுப்பது என்பதே அந்தக் கூட்டத்தின் தலையாய நோக்கமாகும் என்றும் நான் முதலிலேயே நன்றாகத் தெளிவுபடுத்தினேன். பழைய காங்கிரஸ் கட்சி, பாரதீய லோக்தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, புரட்சி சோஷலிஸ்ட் கட்சி, அகாலிதளம் போன்ற கட்சிகளுக்கு நான் அழைப்பு அனுப்பியிருந்தேன். தவிர "மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினை மீதும் எந்தத் கட்சியோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்கக் தயாராக இருக்கிறது" என்று அப்போது பி. ராமமூர்த்தி அவர்கள் கூறியதின் அடிப்படையில் தான் அந்தக் கட்சிக்கும் அழைப்பு அனுப்பியிருந்தேன். அழைப்பு அனுப்பியிருந்தேனே அந்தக் கட்சி கலந்து கொள்கிறது என்று நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்த ஒரு மாலைப் பத்திரிகை அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து சொல்வார்கள் என்று கருணாநிதி கூறியிருப்பதை நம்பூதிரி பாத்தும், பி. ராமமூர்த்தியும் மறுத் துள்ளனர் என்று செய்தி வெளியிட்டது. பழைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக்மேத்தா அவர்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியி ருந்ததோடு அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார். அவரைப் போலவே பி.எல்.டி. கட்சியின் தலைவரான சரண்சிங் அவர்களும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் கோரே பம்பாயி லிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று செய்தியாளர்கள் மூலமாகவும், முரசொலியில் எழுதிய கடிதத்தின் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன். இருந்தாலும் அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. டிசம்பர் 15-ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்வதற் காக நானும் நண்பர்கள் ராஜாராமும், ஜி.லெட்சுமணனும்